முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
24

அருகில்சென்று வணங்கினார்” என்னுமாறுபோலே. பணியீர் - 1இத்தலையில் நின்றும் சென்றாரை அவன் சொல்லும்படியேயாகிலும் சொல்லவேண்டுமே. 2தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைச் சொல்லும்படியை, இத்தலையில் நின்றும் சென்றாரைச் சொல்லா நிற்கும் அவன். 3சொரூபத்தால் சொல்லுமவை இவையானால், காதலால் வருமவை சொல்லவேண்டா அன்றோ. அடியேன் இடர் பணியீர் - 4அவன் அறியாதனவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமே! 5அறிந்தானாகில், ஆள் விடப் பார்த்திருப்பானோ. 6இரண்டுதலைக்கும் கலவி ஒத்திருக்க, இத்தலைக்கு வந்த இடரை அறிவியுங்கோள் என்பாள் ‘அடியேன் இடர் பணியீர்’ என்கிறாள். 

556.

        இடரில் போகம்மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
        விடலில் வேதஒலி முழங்கும் தண்திரு வண்வண்டூர்
        கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
        உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.

   
பொ-ரை :- பிரிவுஇல்லாத போகத்திலே மூழ்கிச் சேர்ந்து அநுபவிக்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! பிரிதல் இல்லாத வேதத்தின் ஒலியானது ஒலித்துக்கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவண்வண்டூரில் எழுந்தருளியிருக்கின்ற கடல்போன்ற நிறத்தையுடைய உபகாரகனும் கண்ணபிரானுமான நெடிய திருமாலைக் கண்டு, ஒருபெண்ணானவள் சரீரம் நிலைகுலைந்து உருகுகின்றாள் என்று உணர்த்துங்கோள்.

 

1. ஜனக குல சுந்தரியான தான் பறவைகளைப் பார்த்துப் “பணியீர்”
  என்னலாமோ? என்ன, ‘இத்தலையில்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

2. அவன் சொல்லும்படி யாது? என்ன, ‘தன்னை ஒழிந்தார் அடங்கலும்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. தன்னினின்றும் வேறுபட்டவர் தன்னைச்சொல்லும் வார்த்தையை,
  சர்வாதிகனான தான், தூது வந்தவர்களைச் சொல்லக் கூடுமோ? என்ன,
  ‘சொரூபத்தால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

4. “பணியீர்” என்கிறது ஏன்? அவன் அறியானோ? என்ன, ‘அவன்
   அறியாதனவற்றை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

5. முற்றறிவினனுக்கு அறிவின்மை உண்டோ? என்ன, ‘அறிந்தானாகில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. “அடியேன் இடர்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இரண்டு
   தலைக்கும்’ என்று தொடங்கி.