New Page 1
“எம்பெருமானார்”
என்றால், திருநாமம் நிறம்பெறுமாறுபோலேயும்,
அனந்தாழ்வான் “திருவேங்கடமுடையான்” என்றால், திருநாமம் நிறம்பெறுமாறு போலேயும்;
1“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்” என்னுமாறுபோலே.
604.
திருந்து வேதமும்
வேள்வியும் திருமாமகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல்
வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி2கைதொழுத
அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந!
என்றென்றே நைந் திரங்குமே.
பொ-ரை :- திருந்திய வேதங்களும் யாகங்களும் அழகிய செல்வமும்
ஆகிய இவற்றால் நிறைந்திருக்கின்ற பிராமணர்கள் நிறைந்து இருந்து வாழ்கின்ற, தாமிரபரணிக்கு
வடக்கேயுள்ள வளப்பம்பொருந்திய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தை, கரிய
விசாலமான கண்களையுடைய இவள் கைகூப்பி வணங்கிய அந்த நாள் தொடங்கி இந்த நாள்வரையிலும்
இருந்து இருந்து தாமரைக்கண்ண! என்று என்றே உருக் குலைந்து மனமும் கரையாநின்றாள்.
1. இதனை வால்மீகிபகவான்
பக்கலிலும் காணலாம் என்கிறார் ‘எவை உம்மால்’
என்று தொடங்கி.
“பஹவோ துர்லபா: சஏவயே
த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம்
புத்வா தை: யுக்த: ச்ரூயதாம் நர:”
என்பது, சங்க்ஷேப ராலாயணம், 7.
இந்தச் சுலோகத்தில் ‘கதிதா’ என்னாது,
“கீர்த்திதா” என்கையாலே, குணங்கள் நிறம்பெற்றன
என்று தோற்றுகிறது.
வாங்கரும் பாத நான்கும்
வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிக ளாரத்
தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை
அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச
லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்.
என்றார் கம்பநாட்டாழ்வாரும்.
2. வரையாழி வண்ணர் அரங்கேசர்
ஈசன்முன் வாணன் திண்தோள்
வரையாழி யார்புள்ளின்
வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த்
தூசும் நாணும் மதியும் செங்கை
வரையாழியும் வளையு மிழந்தாள்
என்மடமகளே.
என்பது, திவ்விய கவியின்
திருவாக்கு.
(திருவரங்கத். 58.)
|