முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
246

திரு மா மகளிரும் தாம் - 1ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி. திருமாமகள் - செல்வம். 2அன்றிக்கே, ஆராதிக்கப்படுகின்ற பிராட்டியும் தானுமாகவுமாம். தாம் - தான். ஆக, 3பிரமாணம் பிரமேயம் பிரமாதாக்கள் குறைவற்று வாழ்கின்ற தேசம் என்றபடி. மலிந்து இருந்து - 4பரமபதத்தில் உள்வெதுப்போடேபோலே யன்றோ இருப்பது. பொருநல் வடகரை - விரஜைக்கு அக்கரை என்னுமாறு போலே. கரும்தடம் கண்ணி-கண்ணழகில், கறுத்த கண்களையுடைய பிராட்டியோடு 4ஒக்கும். தடம்கண்ணி - அவளைக் காட்டிலும் வேறுபாடு. 5அவனை அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு; அவள் கண்களைக்காட்டிலும் ஏற்றம் உண்டன்றோ, அவர்கள் இருவரையும் அநுபவிக்கையாலே இவள் கண்களுக்கு; 6தொழும்போதும் வடிவு அழகியராயிருப்பார் தொழவேணுமாகாதே.

 

1. “வேள்வியும்” என்றதனைச் சார, “திரு மா மகளிரும் தாம்” என்றதற்குக்
  கருத்து அருளிச்செய்கிறார் ‘ஆராதிக்கின்றவர்களுடைய” என்று தொடங்கி.
  என்றது, மந்திரங்களைக்கொண்டு வைதிக சமாராதனம் செய்யும்போது
  செல்வம் குறைவற உண்டாயிருக்கவேண்டுமன்றோ, அதனைச் சொல்லுகிறது
  என்றபடி. “திருமாமகளிரும் தாம்” என்பதற்குப் பொருள், செல்வத்தையுடைய
  பிராமணர்கள் என்பது.

2. “திரு மா மகளிரும் தாம்” என்பதற்கு, வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. தாம் - என்றது, இங்கே,
  ஈசுவரனை.

3. பிரமாணம், வேதம்; பிரமேயம், வேள்வி; பிரமாதா, பிராமணர்கள்.
  இரண்டாவது பொருளில், ‘பிரமேயம்’ என்றது, சர்வேசுவரனை,

4. “திருமாமகளிரும் தாம் மலிந்திருந்து” என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘பரமபதத்தில்’ என்று தொடங்கி. இது, “திருமாமகளிரும்
  தாம்” என்பதற்கு, மேலே அருளிச்செய்த இருவகைப் பொருள்களில்,
  இரண்டாவது பொருளுக்கு, பாவம்.

5. வேறுபாட்டினைக் காரணத்தோடு காட்டுகிறார் ‘அவனை அநுபவிக்கையால்’
  என்று தொடங்கி. அவளுக்கு - சீதாபிராட்டிக்கு. அவர்கள் இருவரையும்
  -பெருமாளையும், பிராட்டியையும். இவள் - ஆழ்வார்நாயகி.

6. “கருந்தடங்கண்ணி” என்று அவயவலக்ஷணத்தைச் சொல்லி, “கைதொழுத”
  என்றதனால், பாவம் அருளிச்செய்கிறார் ‘தொழும்போதும்’ என்று தொடங்கி.