605
605.
இரங்கி நாள்தொறும்
வாய்வெரீஇ இவள் கண்ணநீர்கள் அலமர
மரங்களும் இரங்கும்
வகை மணிவண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்
தானுறை தொலைவில்லு மங்கலம் என்றுதன்
கரங்கள் கூப்பித்தொழும்
அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.
பொ-ரை :-
இவள் நாள்தோறும் இரங்கி வாய்வெருவிக் கண்களிலே
நீர் தேங்கும்படியாக மரங்களும் இரங்கும்படி மணிவண்ணா! என்று கூவுகிறாள்; பேசுதற்குக் கற்றுக்கொண்டபிறகு
கேசி என்னும் அசுரனது வாயினைப் பிளந்த எம்பெருமான் நித்தியவாசம் செய்கிற திருத்தொலை
வில்லி மங்கலம் என்று சொல்லித் தன்னுடைய கைகளைக் குவித்துத் தொழுவாள்.
வி-கு :-
வெருவி - வெரீஇ; சொல்லிசையளபெடை. அலமருதல் - சுழலுதல். துரங்கம் - குதிரை. பிளந்தான்:
வினையாலணையும் பெயர். திருநாமம் கற்றதற் பின்னை, காங்கள் கூப்பித் தொழும் என்க.
ஈடு :- ஒன்பதாம்
பாட்டு. 1இவளுடைய மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் முதலிலே தொடங்கி அவன் பக்கலிலே
ஈடுபட்டன ஆயின என்கிறாள்.
இரங்கி - நெஞ்சு
அழிந்து. வாய்வெரீஇ - 3அடியற்ற பேச்சாய் இராநின்றது. “இராமா! என்றும் இராமா!
என்றும் எப்பொழுதும் புத்தியினால் எண்ணி அவனையே வாக்கால் சொல்லிக்கொண்டவளாய்” என்னுமாறுபோலே,
மனத்தின் துணை இன்றிக்கே இருக்கை. நாள்தொறும் - 3மயர்வறமதிநலம் அருளப்பெற்ற
அன்றே அறிவு கேடும் குடிபுகுந்தது காணும். பக்தியின் உருவத்தை அடைந்த ஞானம்
1. “இரங்கி, கூவுமால், கரங்கள் கூப்பித் தொழும், திருநாமம் கற்றதற்பின்னை”
என்பனவற்றைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. நெஞ்சு அழிந்தால்,
வாய் வெருவக் கூடுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அடியற்ற’ என்று தொடங்கி. இதற்குத்
திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘இராமா’ என்று தொடங்கி.
“ராமேதி ராமேதி ஸதைவ
புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ
தஸ்ய அநுரூபாம்ச கதாம்
ததர்தாம் ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”
என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11.
சுலோகத்திலே “ப்ருவதீ” என்ற பதத்தாலே,
வாக்காலே என்னுமது போதரவும், “வாசா” என்று விசேடிக்கையாலே
மனத்தின் துணை இல்லை என்றபடி.
3. “நாடொறும்”
என்றதற்கு, எல்லை ஏது? என்ன, அதற்கு
விடைஅருளிச்செய்கிறார் ‘மயர்வற’ என்று தொடங்கி. அப்போது
அறிவு
கேடு குடிபுகுதற்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பக்தியின்’ என்று
தொடங்கி.
|