அன
அன்றோ பெற்றது. இவள்
கண்ணநீர்கள் அலமர - 1கண்கள் வாய்வெருவுகிறபடி. ‘நாள்தொறும் வாய்வெரீஇ’ என்றது,
2பொய்ந்நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிட்ட கூப்பீட்டை அன்றோ.
மரங்களும் இரங்கும் வகை - 3சேதனம் என்றும், அசேதனம் என்றும் வேறுபாடு அற அழியும்படி
காணும், இவள் வாய்விட்டுக் கூப்பிடும் படி. 4எம்பாரை ‘மரங்களும் இரங்கக்
கூடுமோ?’ என்று கேட்க, இது அருளிச்செய்த அன்றுதொடங்கி எத்தனை பாவசுத்தி இல்லாதார் வாயிலே
புக்கது என்று தெரியாது; இங்ஙனே இருக்கச்செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே
பதம்செய்யப் பார்த்தாலும் சுக்கான்பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி
கண்டால் சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்று அருளிச்செய்தார். 5“மரங்கள்
நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்” என்று அவதாரத்தில் திருக்குழல்
ஓசையில் பட்ட எல்லாம் இத் துன்ப ஒலியிலே படுமாயின; “மரங்களும் வாடி நின்றன” என்று, இராமனைப்பிரிந்த
பிரிவில் பட்ட எல்லாம் இவள்பேச்சிலே படாநின்றன.
1. “வாய்வெரீஇ” என்றதனோடு
கூட்டி, “கண்ணநீர்கள்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘கண்கள்’ என்று தொடங்கி.
2. முன்னர், “நாடொறும்
இரங்கி” என்று சேர்த்து, பாவம் அருளிச்செய்தார்
‘மயர்வற’ என்று தொடங்கும் வாக்கியத்தால்.
இப்பொழுது “நாடொறும்
வாய்வெரீஇ” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘பொய்ந்நின்ற’
என்று தொடங்கி. ஆக, “நாடொறும்” என்பதனை, இடைநிலைத் தீவகமாக
முன்னும் பின்னும் கூட்டிப்
பொருள் அருளிச்செய்கிறார் என்க.
3. மரங்கள் இர்ங்கக்
கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘சேதனம்’ என்று தொடங்கி. “மரங்களும்” என்ற
உம்மை, மக்களைத்
தழுவுகிறது.
4. மரங்கள் இரங்குவதற்குச்
சம்வாதம் காட்டுகிறார் ‘எம்பாரை’ என்று
தொடங்கி. திருவாய்மொழி, 5-ஆம் பத்து, 7-ஆம் திருவாய்மொழி,
7-ஆம்
பாசுரம் வியாக்கியானம் பார்க்கவும்.
5. மரங்கள் அழியக் கண்ட
இடம் உண்டோ? என்ன, அதற்கு இரண்டு
உதாரணம் காட்டுகிறார் ‘மரங்கள்’ என்று தொடங்கியும்,
‘மரங்களும்’ என்று
தொடங்கியும்.
‘மரங்கள் நின்று’ என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4.
“மரங்களும் வாடி நின்றன” என்பது, ஸ்ரீராமா.
அயோத். 59 : 10.
“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:”
|