New Page 1
சொல்லிக் கூப்பிடாநின்றாள்.
ஆல் - ஆச்சரியத்தைக் காட்டும் இடைச்சொல். அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் - தன்னுடைய
வியாமோகத்துக்கும் அவன் கிருஷி செய்தபடி. முற்பாடனாய் வந்து அவன் நிற்பது இருப்பதாய்க் கொண்டு
நித்தியவாசம் செய்கிற ஊர். 1பசியன், சோறு தாழ்த்தால் படுமாறுபோலே. சென்னியால்
வணங்கும் - தன்கரங்கள் கூப்பித் தொழுகையும் 2வேண்டத் தக்கதானபடி. இருந்த இடத்தே
இருந்து தலைசாய்க்கும்படி ஆனாள். அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே - அவ்வூர்த் திருநாமம்
கேட்கச் செவிதாழ்க்கையிலே 3இவளுக்கு மநோரதம். இவள் ‘அவ்வூர்’ என்றது,
பெண்பிள்ளை சொன்னாற்போலே இராமையாலே. ஆயின், ஒருகால் சொன்னாளே என்னில், ‘அது 4வறைமுறுகல்
ஆயினமையால் அன்றோ பின்பு தவிர்ந்தது’ என்று அருளிச்செய்வர்.
(10)
607.
சிந்தை யாலும்
சொல்லாலும் செய்கையி னாலும் தேவபி ரானையே
தந்தை தாய் என்
றடைந்த வண்குரு கூர வர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள்
இவை தொலை வில்லி மங்கலத் தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும்
வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே.
பொ-ரை :- தேவபிரானையே தந்தை என்றும் தாய் என்றும்
மனத்தாலும் வாக்காலும் சரீரத்தாலும் அடைந்த வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலேயுள்ளவர்கட்குத்
தலைவரான ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த பழைமை பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள், திருத்தொலை
வில்லிமங்கலம் என்னும் திவ்வியதேசத்தைப் பற்றிச் செந்தமிழால் அருளிச்செய்த இவை பத்துப்
பாசுரங்களையும் வல்லவர் திருமாலுக்கு அடிமை செய்வார்கள்.
1. ‘உறையும்’ என்னாமல்,
“நின்று இருந்து” என்று விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பசியன்’ என்று தொடங்கி.
இதனால், நிற்பது
இருப்பதாகிற இரண்டனையும் ஒரே இடத்தில் செய்தான் என்கையாலே,
சர்வேசுவரனுக்கு
ஆழ்வாரை அநுபவிக்கையில் உண்டான விடாய் எல்லாம்
தோற்றுகிறது என்க.
2. ‘வேண்டத் தக்கதான
படி’ என்றது, கையெடுத்துத் தொழுதற்கும் வலி
இல்லாமற் போயிற்று என்றபடி.
3. ‘இவளுக்கு மனோரதம்’
என்றது, பல ஹாநியாலே கேட்கை தானும்
வேண்டத்தக்கதானபடியாயிற்று என்றபடி.
4. வறைமுறுகல் - கருகிப்போதல்.
|