முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
257

லாய் இராதன்றோ. 1“பெருமாளால் அபயம் கொடுக்கப்பட்டபோது, இராவணன் தம்பியும் மஹாபுத்திசாலியுமான விபீஷணன் பூமியைப் பார்த்துக்கொண்டு வணங்கினான்” என்று இவன் தறைப்படும்படியன்றோ அவனுடைய வியாமோகம் இருப்பது.

608.

        மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
        நீலக் கருநிற மேக நியாயற்கு
        கோலச்செந் தாமரைக் கண்ணற்குஎன் கொங்கலர்
        ஏலக் குழலி இழந்தது சங்கே.

   
பொ-ரை :- திருமாலுக்கு உலகத்தை எல்லாம் அளந்த மணவாளனுக்கு மிகக் கரிய நிறத்தையுடைய மேகம்போன்ற தன்மையனுக்கு அழகிய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனுக்கு என்னுடைய தேனோடு மலர்ந்த பூக்களையுடைய வாசனைபொருந்திய கூந்தலையுடைய மகள் இழந்தது சங்கவளையலேயாம்.

    வி-கு :- மேக நியாயன் - மேகம்போன்ற தன்மையன். ஏலம்-வாசனை. சங்கு - சங்கவளையல்.

இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

    ஈடு :- முதற்பாட்டு. 2இவள் வாமன அவதாரத்தில் குணங்களிலும் செயல்களிலும் அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.

 

1. இதனை, திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார் ‘பெருமானால்’ என்று தொடங்கி.

  “ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
   விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.

  கரங்கள்மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
  மரங்களு முருக நோக்கும் காதலான் கருணை வள்ளல்
  இரங்கினன் நோக்குந் தோறும் இருநிலத் திறைஞ்சு கின்றான்
  வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான்.

  என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக்கலப். 140.

2. “வையம் அளந்த மணாளற்கு இழந்தது சங்கே” என்றதனைக் கடாக்ஷித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.