முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
259

New Page 1

போது உடம்பு வெளுக்கையும். 1வியாமோகம் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஒளதார்யமும் இருக்கிறபடி. நீலக் கரு நிற மேக நியாயற்கு - 2மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி. 3இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி. 4மைப் படி மேனி அன்றோ.

    கோலம் செந்தாமரைக் கண்ணற்கு - காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து, மலர்ச்சி முதலானவைகளையுடையவான திருக்கண்களையுடையவனுக்கு. 6“தாமரைத்தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக்கண்களாலே யாயிற்று அகப்படுத்திக்கொண்டது. 6விசேடணம் தோறும் அவனுக்கு என்று தனித்தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள். ‘மாலுக்கு’ என்று தொடங்கி, 7தன்மகள்மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்; இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று. என் 8கொங்கு அலர் ஏலம் குழலி - தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களை

 

1. “மாலுக்கு” என்ற பதத்திலே நோக்காக, “மேகநியாயற்கு” என்பதற்கு
  அருளிச்செய்த இருவகைப்பொருள்களையும் கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘வியாமோகம்’ என்று தொடங்கி.

2. “நீலக் கருநிறம்” என்பன போன்ற பதங்களைக் கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘மஹாபலியை’ என்று தொடங்கி.

3. “நீலக் கருநிறம்” என்ற விசேடணங்கட்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இவள்’ என்று தொடங்கி.

4. திருமேனி கறுத்திருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘மைப்படி’ என்று
  தொடங்கி. இது, திருவிருத்தம், பாட்டு. 94.

5. திருக்கண்களைச் சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘தாமரை’
  என்று தொடங்கி. இது, திருவாய். 6. 2 : 9.

6. ஓரிடத்திலே ‘அவனுக்கு’ என்று சொல்லலாயிருக்க, அங்ஙனமின்றி,
  “மாலுக்கு”, “மணாளற்கு”, “நியாயற்கு”, “கண்ணற்கு” எனத் தனித்தனியே
  நான்காம் வேற்றுமை கொடுத்துச் சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘விசேடணந்தோறும்’ என்று தொடங்கி. என்பது, வியாமோஹ குணத்திலும்,
  செயல்களிலும், விக்கிரஹத்திலும், கண்ணழகிலும் தனித்தனியே அகப்பட்ட
  துறைகளைச் சொல்லுகிறாள் என்றபடி.

7. “மாலுக்கு” என்றது முதல், “கோலச் செந்தாமரைக் கண்ணற்கு” என்றது
  முடிய, இவற்றை அம்புகளாக உருவகப்படுத்துகிறார் ‘தன் மகள் மேல்’
  என்று தொடங்கி.

8. வேறு ஒரு ரீதியிலே உருவகம் செய்கிறார் ‘இது ஒரு குத்து’ என்று
  தொடங்கி.