சங
சங்கு வில் வாள்
தண்டு சக்கரம் கையற்கு - ஸ்ரீபஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே ஆயிற்று இவள் ஈடுபட்டது.
இவளுடைய 1ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்? கைக்குமேல்
ஐந்துங் காட்டிக்காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று. 2ஆபரணகோடியிலும் ஆயுதகோடியிலும்
இருபுடைமெய்க் காட்டின அன்றோ இவைதாம். செம்கனிவாய்ச்செய்ய தாமரைக்கண்ணற்கு-கையிலே ஒன்றனைத்
தரித்துக் காட்டிக் கவர்ச்சி செய்யவேண்டி இருந்ததோ? புன்சிரிப்பும் நோக்கும் அமையாதோ நலிகைக்கு?
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு - தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாய்மாலையை, ஆதிராஜ்ய
சூசகமான திருமுடியிலேயுடையவனுக்கு. வைத்த வளையத்தைக் காட்டிக்காணும் இவள் நிறத்தை அபகரித்தது.
ஆக, ஆபரணசோபை, அவயவ சோபை, ஒப்பனை அழகு என எத்தனை செய்யவேணும் இவள் நிறத்தினைக்
கொள்ளுகைக்கு என்றபடி. என்மங்கை -தன்பருவத்தாலே இவற்றையடையத் தோற்பிக்குமவள் கண்டீர் நிறம்
இழந்தாள்! மாமைநிறம் - அழகிய நிறம். மாமை - அழகு.
(2)
610.
நிறங்கரி யானுக்கு
நீடுலகு உண்ட
திறங்கிளர்
வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக்
கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல்
இழந்தது பீடே.
பொ-ரை :- கரிய நிறத்தையுடையவனுக்கு, பெரிய உலகத்தை
உண்ட கூறுபாடு விளங்குகின்ற திருவாயினையுடைய சிறிய வடிவிலே பெரிய உலகங்களை எல்லாம் அடக்கிய
கள்வனுக்கு, சுழலுகின்ற சக்கரம் பொருந்திய கையையுடையவனுக்கு, என்னுடைய, விளங்குகிற கரிய கூந்தலையுடைய
பெண்ணானவள் பெருமையை இழந்தாள்.
1. ஓர் ஆபரணம்-மாமைநிறம்.
‘கைக்குமேல் ஐந்துங்காட்டி’ என்பதற்கு,
திருக்கைகளில் இருக்கிற ஐந்து ஆயுதங்களைக் காட்டி என்பது
நேர்பொருள். குறடு கீறி ஆடுகிற அளவிலே அஞ்சுக்கு இலக்காய் ஒரு
பருக்கை இருந்தால், ‘கைமேலே
அஞ்சுபோட்டு வெட்டுகிறேன்’ என்று
ஒட்டம் பேசி அப்படியே போகட்டு அதனை வாங்குகை என்பது வேறும்
ஒருபொருள்.
2. ஆயுதங்கட்கு,
ஆயுதங்களின் தன்மை ஒழிய, ஆபரணங்களின் தன்மை
உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஆபரண
கோடியிலும்’ என்று தொடங்கி. இருபுடைமெய்க்காட்டு - இருபக்கங்களிலும்
- இருபக்கங்களிலும்
சேர்தல்.
|