1அவன
1அவன்,
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே. பண்பு-நீர்மை.
(4)
612.
பண்புடை வேதம்
பயந்த பரனுக்கு
மண்புரை வையம்
இடந்த வராகற்கு
தெண்புனற்
பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை
இழந்தது கற்பே.
பொ-ரை :-
பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும்
பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள் செறிந்த உலகத்தை மேலே
கொண்டுவந்த ஸ்ரீ வராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட
எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள்
கல்வியை இழந்தாள்.
வி-கு :-
மண் - அணுக்கள். “மண்திணிந்த நிலனும்” என்பது,
புறம். (செய்-2.) கற்பு - கல்வி.
ஈடு :- ஐந்தாம்
பாட்டு. 2வேதங்களைக் கொடுத்தல் முதலான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்மகள் கல்வியினை
இழந்தாள் என்கிறாள்.
பண்புடைவேதம் -
3ஈசுவரனை உள்ளபடியே காட்டித் தரும்
புண்ணவாம் புலவு வாட்கை
பொலன்கழல் புனைந்த பைந்தார்க்
கண்ணவாம் வனப்பி
னாளைக் காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப்
படாமுலைப் பரவை அல்குல்
பெண்ணவா நிற்கு மென்றால்
பிணையனாட் குய்தல் உண்டோ?
என்பது, சிந்தாமணி. 1528.
“ஆடவர் பெண்மையை அவாவு
தோளினாய்
தாடகை என்பதுஅச் சழக்கி
நாமமே”
என்பது, கம்பராமாயணம், தாடகை
வதைப்பட.
1. சஜாதீயரை அழிக்கக்கூடுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவன்’ என்று தொடங்கி.
“பும்ஸாம் த்ருஷ்டி
சித்தாபஹாரிணம்”
என்பது, ஸ்ரீராமா.
அயோத். 3 : 29.
2. “பண்புடைவேதம்” என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச் செய்கிறார்.
3. வேதத்திற்குப்
பண்பு எது? என்ன, ‘ஈசுவரனை’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச் செய்கிறார்.
|