கண
கண்டீர் உண்டான அறிவினை
வாங்கிக்கொள்ளுகிறான்! எம் தேவபிரானுக்கு - பிரமன் சிவன் முதலானவர்கட்கும் உபகாரகனானவனுக்கு.
1“ஈசுவரோஹம்” என்று இருந்தாளாகில் அறிவு இழக்கவேண்டா கண்டீர்! என் கண்
புனை கோதை - 2கண்டார் கண்கள் பிணிப்பு உண்கையாலே, அவற்றை ஆபரணமாகவுடைய மயிர்முடியையுடையவள்.
அதாவது, வைத்த கண் வாங்க ஒண்ணாதிருக்கை, கண்களுக்கு விஷயம் தலையாய்விட்டது. இழந்தது கற்பே
- எல்லார்க்கும் ஞானத்தைக் கொடுக்கக்கூடியவனான அவனுக்குங்கூட அறிவினைக் கொடுக்கும் இவள் கண்டீர்
அறிவினை இழந்தது! 3“இராஜாக்களின் இலக்ஷணங்களை அறிந்தவளே” அன்றோ. கற்பு - கல்வி,
அதாவது, ஞானம்.
(5)
613.
கற்பகக் காவன
நற்பல தேளாற்கு
பொற்சுடர்க்
குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க்
கையற்குஎன்
விற்புரு வக்கொடி
தோற்றது மெய்யே.
பொ-ரை :-
கற்பகச்சோலையைப் போன்ற சிறந்த பல தோள்களையுடையவனுக்கு,
பிரகாசம் பொருந்திய பொன்மலையைப் போன்ற அழகிய குளிர்ந்த திருமுடியையுடையவனுக்கு, அன்று பூத்த
அழகிய தாமரை மலர்கள்
1. “எம்” என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
‘ஈஸ்வரோஹம்’ என்று தொடங்கி. ‘வேண்டா கண்டீர்’ என்றதன்பின்,
‘அச்செயலுக்குத் தோற்று “எம்’ என்கையாலே அறிவு இழந்தாள்’ என்ற
வாக்கியத்தைச் சேர்த்துக்கொள்வது.
2. பண்புற நெடிது நோக்கிப்
படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கெல்லை
யில்லையாம் என்று நின்றாள்
கண்பிற பொருளிற் செல்லா
கருத்தெனின் அஃதே நீண்ட
பெண்பிறந் தேனுக் கென்றால்
என்படும் பிறருக் கென்றாள்.
என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப்படலம்.
3. அவனுக்கும் அறிவைக்
கொடுக்கும்படியான அறிவு இவளுக்கு உண்டோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இராஜாக்களின்’ என்று
தொடங்கி.
“தேவகார்யம் ஸ்ம ஸா
க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்டசேதநா
அபிஜ்ஞா ராஜதர்மாணாம்
ராஜபுத்ரம் ப்ரதீக்ஷதே”
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
26 : 4.
|