முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
27

ளவர

ளவர்கள்” என்கிறதன்றோ. 1மற்றோர் அடையாளம் சொல்ல வேண்டுமோ, புறப்பட்டவாறே வேத ஒலி வழிகாட்டுகிறதன்றோ என்பாள் ‘முழங்கும்’ என்கிறாள். என்றது, வேதமார்க்க அநுசாரிகள் அன்றோ நீங்கள் என்றபடி. கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலை - 2கடல்போலே சிரமத்தைப் போக்கக் கூடிய தான வடிவையுடையனாய், அவ் வடிவைத் தாழ நின்று இத்தலைக்கு முற்றூட்டாக உண்பித்து, பின்னையும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தையுடையவன். அன்றிக்கே, குளிர்ந்த வடிவை பவ்யரைப் போலே நின்று உண்பித்து, இப்போது எட்டாதபடி இருக்கிறவன் என்னுதல். 3அன்று தானும் தனக்கு வேண்டுவதாகச் செய்தானல்லன், இத்தலையை அழிக்கைக்காகச் செய்தானித்தனை; அன்று வேண்டியிருந்தானாகில் இன்றும் வேண்டி இரானோ. உடலம் நைந்து - ‘நெஞ்சிலே சிறிது நோவு பிறந்த அளவேயாகில், சரீரத்தை ஒருவாட்டம் வருவதற்கு முன்னே சென்று கைக்கொள்ளுகிறோம்’ என்று இருக்கவேண்டா. 4தனித்தனியே அறிவுபெற்று அழியவல்ல உடம்பே அன்றோ. 5அவ் வுடம்போடே

 

1. நாங்கள் செல்லுகிற ஊருக்கு அடையாளம் எது? என்ன, ‘மற்றோர்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘வேதமார்க்க அநுசாரிகள்
  அன்றோ நீங்கள்’ என்றது, வேதத்துக்காக மது கைடபர்களைத் தேடித்
  திரிந்த அன்னத்தின் உருவமான சர்வேசுவரனோடு ஒத்தசாதியினரன்றோ
  நீங்கள் என்றபடி.

2. “கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலை” என்பதற்கு,
  இருவகையாகப் பொருள் அருளிச்செய்கிறார் ‘கடல்போலே’ என்று
  தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும். முதற்பொருளுக்கு,
  “கடலின்மேனி கண்ணபிரான் நெடுமாலை” என்று சொற்களைப் பிரித்துக்
  கூட்டிக் கொள்க. இரண்டாவது பொருளில், “நெடுமால்” என்றது,
  பெரியோன் என்றபடி.

3. இன்று எட்டாதபடி இருக்கிறவன் அன்று எளியனாய் வந்து
  கலக்கக்கூடுமோ? என்ன, ‘அன்று தானும்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

4. அறிவு இல்லாத சரீரம் நையக் கூடுமோ? என்ன, “முடியானே” என்ற
  திருவாய்மொழியிற் கூறப்பட்ட கரணங்கள் ஆகையாலே, கூடும் என்கிறார்
  ‘தனித்தனியே’ என்று தொடங்கி.

5. உடலம் நைவான் என்? தரித்திருந்தால் ஆகாதோ? என்ன,
  அவ்வுடம்போடே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.