முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
270

New Page 1

போன்ற திருக்கைகளையுடையவனுக்கு, வில்லினைப்போன்ற புருவங்களையுடைய பூங்கொம்புபோன்ற என் பெண்ணானவள் தனது சரீரத்தினை இழந்தாள்.

    வி-கு :- கா - சோலை. அன்ன - ஒத்த. சுடர் பொற் குன்று என மாற்றுக.

    ஈடு :- ஆறாம் பாட்டு. 1பெரும் புறக்கடலிலே திருப்பள்ளி கொண்டவனுடைய அவயவ சௌந்தர்யத்திலே அகப்பட்டு இவள் தன்னுடைய மெய்யினை இழந்தாள் என்கிறாள்.

    கற்பகம் கா அன்ன நல் பல தோளற்கு - 2தன் அவயவங்களைக் காட்டி இவளுடைய அவயவியைக் கொண்டான். கற்பகச்சோலை போலேயாய், அவ்வளவன்றியே விலக்ஷணமான பல திருத்தோள்களை யுடையவனுக்கு. சுடர் பொன் குன்று அன்ன பூந் தண் முடியற்கு - ஒளியையுடைய பொன்மலை போலேயாய்க் காண்டற்கு இனியதாய்த் திருமுடிக்குத் தகுதியான திருவபிடேகத்தையுடையவனுக்கு. பூ என்பதற்கு, மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட என்னலுமாம். திருமுடியைக் கூறியது, எல்லா ஆபரணங்களுக்கும் உபலக்ஷணம். நல் பல நாள் தாமரை மலர்க் கையற்கு - நன்றாய்ப் பலவாய்ச் செவ்வித்தாமரைப் பூப்போலே இருக்கிற திருக்கைகளையுடையவனுக்கு. என் வில்புருவம் கொடி - வில்போலே இருக்கிற என்பெண். 3பிரஹ்மாஸ்திரத்தைக்கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது! தோற்றது மெய்யே - 4“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்” என்னப் பண்

 

1. இத்திருப்பாசுரத்தில் தனியே ஓர் அவதாரத்தைச் சொல்லாமையாலே, மேல்
  திருப்பாசுரத்திற் சொன்ன பெரும்புறக்கடலில் பள்ளி கொண்டவனையே
  சொல்லுகிறது என்றுகொண்டு, “கற்பக்காவன” போன்றவைகளைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “நற்பல தோளற்கு, தோற்றது மெய்யே” என்பதனைக் கடாக்ஷித்து, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘தன் அவயவங்களை’ என்று தொடங்கி.

3. “விற்புருவக்கொடிதோற்றது” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘பிரஹ்மாஸ்திரத்தை’ என்று தொடங்கி.

4. “ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
   ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே”

 
என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10.