New Page 1
ணும் வடிவைக் காட்டி,
1“கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது.
தன்வசப்படாத சரீரத்தையுடையவளானாள் என்பது கருத்து.
(6)
614.
மெய்யமர் பல்கலன்
நன்கணிந் தானுக்கு
பையர வின்
அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய
கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது
தன்னுடைச் சாயே.
பொ-ரை :- திருமேனிக்குப் பொருந்தின பலவகைப்பட்ட
ஆபரணங்களைக் காட்சிக்கு இனியதாம்படி அணிந்திருப்பவனுக்கு, படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடையவனுக்கு,
திருக்கரங்களும் திருவடிகளும் செந்நிறத்தோடு கூடின கண்ணபிரானுக்கு, என் பெண்ணானவள் தன்னுடைய
சோபையை இழந்தாள்.
ஈடு :-
ஏழாம்பாட்டு. 2திருப்பாற் கடலிலே திருக்கண்
வளர்கின்றவனுடைய ஆபரணசோபை முதலானவைகளிலே அகப்பட்டு இவள் லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள்.
மெய் அமர் பல்
கலன் - திருமேனியிலே பூத்தாற்போலே பொருந்தியிருந்துள்ள திருமுடி முதல் நூபுரம் ஈறாகவுள்ள திரு
ஆபரணங்கள். நன்கு அணிந்தானுக்கு - பூணவல்லபடியாலே வந்த அழகு. பைஅரவின் அணைப் பள்ளியினானுக்கு
- தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடையவனாய், நாற்றம் மென்மை குளிர்த்தி இவற்றை
இயல்பாகவுடையவனைப் படுக்கையாகவுடையவனாய், அதிலே திருக்கண்வளர்ந்தருளுகிறவனுக்கு: 3இதுவும்
ஓர் ஆபரண விசேடம்போலே காணும்; அநந்தமுகமான ஆபரணம் அன்றோ. 4மேலே கூறிய ஒப்பனை
நிறம்பெறும்படியான படுக்கை அன்றோ.
1. “சிரம் ஜீவதீ வைதேஹீ
யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா
தாம் அஸிதேக்ஷணாம்”
என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.
2. “பையரவின் அணைப்பள்ளியினானுக்கு,
மெய்யமர் பல்கலன்” என்பன
போன்றவற்றைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. “பல்கலன்” என்றதன்பின்,
திருவனந்தாழ்வானை அருளிச்செய்ததற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இதுவும்’ என்று தொடங்கி.
அதனையே
ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘அநந்தமுகமான’ என்று தொடங்கி.
ஆதிசேஷன் உருவமான
என்றும், பல உருவமான என்றும் பொருள்.
4. “பல்கலன்”
என்றதன்பின், திருவனந்தாழ்வானைக் கூறியதற்கு வேறும் ஒரு
பாவம் அருளிச்செய்கிறார் ‘மேலே கூறிய’
என்று தொடங்கி.
|