New Page 1
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு
- திருமேனிக்குப் பரபாகமான சிவப்பையுடைய திருக்கைகளையும், திருவடிகளையுமுடையவனாய் உபகாரசீலனான
ஸ்ரீகிருஷ்ணனுக்கு. 1திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியாலேயாயிற்று அவயவங்கள் தொடக்கமானவை
பூர்ணமாயின. என் தையல் இழந்தது தன்னுடைச் சாய் - என் பெண்பிள்ளை இழந்தது, மாணிக்கத்தின்
ஒளிபோலே தனக்கு நிறங்கொடுக்கும் லாவண்யத்தை. 2கழற்றிப் பூணும் ஆபரணத்தைக்
காட்டிக் கழற்ற ஒண்ணாத ஆபரணத்தைக் கொண்டான். தையல் - பெண். சாய் - லாவண்யம்.
(7)
615.
சாயக் குருந்தம்
ஒசித்த தமியற்கு
மாயச் சகடம்
உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப்
பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி
இழந்தது மாண்பே.
பொ-ரை :-
குருந்த மரமானது சாயும்படி முறித்த தனிவீரனுக்கு,
சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி முலைப்பாலைக் குடித்த
உபகாரகனுக்கு, என்னுடைய, வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தன் மாண்பினை இழந்தாள்.
வி-கு :- மாய - இறக்க. மாயம் என்று பிரித்து வஞ்சனையுடைய
என்னுதல், பேயை : வேற்றுமை மயக்கம் குழலி - கூந்தலையுடையவள்.
ஈடு :- எட்டாம்பாட்டு.
4கிருஷ்ணன், தன் விரோதிகளை அழித்த செயலுக்குத் தோற்று, இவள், தன்னுடைய பெண்மையை
இழந்தாள் என்கிறாள்.
குருந்தம் சாய ஒசித்த
தமியற்கு - 4அசுர ஆவேசத்தாலே தழைத்துப் பூத்து நின்ற குருந்தத்தை வேரோடே சாய்ந்து
விழும்படி
1. “பள்ளியினானுக்கு” என்றதனோடே
சேர்த்து, “கையோடு கால் செய்ய”
என்பதற்குப் பாவம் அருளிச்செய்கிறார் ‘திருவனந்தாழ்வானுடைய’
என்று
தொடங்கி.
2. “பல்கலன்” என்றதனைக்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
‘கழற்றிப்பூணும்’ என்று தொடங்கி.
3. “சாயக் குருந்தம் ஒசித்த”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
4. “சாய” என்பதற்கு, சாயையையுடைய என்றும், சாயும் படி என்றும்
பொருள்கொண்டு அவ்விரண்டு பொருளையும் சேர
அருளிச் செய்கிறார்
‘அசுர ஆவேசத்தாலே’ என்று தொடங்கி.
|