முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
274

616

616

        மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
        சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
        காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
        பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.

   
பொ-ரை :- அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய, ஆபரணங்களைத் தரித்த மெல்லிய முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.

    வி-கு :- தோற்றம் - தோன்றுதல்; அவதாரத்தைக் குறித்தபடி காகுத்தன் - ககுஸ்தவம்சத்தில் பிறந்தவன். நம்பி - பூர்ணன்.

    ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 1ஸ்ரீ வாமனம் முதலிய அநேக அவதாரங்களிலே அகப்பட்டு இவள் தன் அழகினை இழந்தாள் என்கிறாள்.

    மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு - 2அழகு சமைந்த ஒப்பனையையுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய ஸ்ரீ வாமனனுக்கு. மாண்பு - அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம். சேண் சுடர் குன்று அன்ன செம்சுடர் மூர்த்திக்கு - 3அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி. ஓங்கிய புகரையுடைய மலைபோலே அழகிய ஒளியையுடைய வடிவினையுடையவனுக்கு. காண் பெரும் 4தோற்றத்து - கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையையுடைய தோற்றத்தையுடைய என்னுதல்; தோற்றம் - அழகு. அன்றிக்கே, “ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவ

 

1. “மாயக் குறளற்கு” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘அழகு சமைந்த ஒப்பனை’ என்றது, பூணுநூல், மான்தோல், தருப்பை
  முதலியவற்றை. வேடம் - விக்கிரஹம்.

3. ‘அடியிலே’ என்றதற்கு, முதலில் என்றும், வேரிலே என்றும் பொருள்.

4. “தோற்றம்” என்பது அழகு; அது, இங்கு விக்கிரஹத்தைக் காட்டுகிறது.
  இரண்டாவது பொருளில் “தோற்றம்” என்றது, அவதாரத்தினை. அதனை
  அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.

  “ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
   லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”

 
என்பது, ஸ்ரீராமா. பால, 3 : 10.