த
தாரம்” என்கிற அவதாரத்தின்
மஹத்துவமாதல். எம் காகுத்த நம்பிக்கு-1குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.
2“தசரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன்” என்னுமவராதலின் ‘எம் காகுத்தன்”
என்கிறாள். 3“குணங்களுக்கு எல்லாம் நிலைக்களமானவர்” ஆதலின் ‘நம்பி’
என்கிறாள். என் பூண் புனை மென்முலை - ஆபரணத்தாலே அலங்கரிக்கப்பட்டனவாய் விரகத்தைப் பொறுக்கும்
அளவில்லாத மெல்லிய முலைகளையுடையவள். தோற்றது பொற்பே - 4“பூண்புனை மென்முலை”
என்கையாலே, ஒப்பனையால் வந்த அழகினை இழந்தாள் என்கிறாள். பொற்பு - அழகு. 5“மலராள்
தனத்துள்ளான்” என்கிறபடியே, அவனைத் தன்னழகாலே புறம்பு ஒன்று அறியாதபடி பண்ணி அநுபவிக்குமவள்
கண்டீர் தோற்றாள் என்கை.
(9)
617
பொற்பமை நீண்முடிப்
பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை
மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய்
நிற்கு மாயற்குஎன்
கற்புடை யாட்டி
இழந்தது கட்டே.
பொ-ரை :- அழகுபொருந்திய நீண்ட திருமுடியிலே தரித்த
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனுக்கு, சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களோடே
போர்செய்த தோள்களையும் ஆச்சரியமான செயல்களையுமுடைய உபகாரகனுக்கு, நிற்கின்றனவான பலவகைப்பட்ட
பொருள்
1. ‘குணங்கள் நிறைந்த’
என்ற இந்த இடத்தில்
“ஆந்ருஸம்ஸ்யம் அநுக்ரோஸ:
க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி
ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”
என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா.
அயோத். 33 : 12.
2. “எம்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘தயரதற்கு’ என்று தொடங்கி.
இது, திருவாய். 3. 6 : 8.
3. “குணாநாம் ஆகரோ மஹாந்”
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.
4. மேலே ‘அழகினை இழந்தாள்’
என்று கூறியிருக்க, இங்கும் “பொற்பு
இழந்தது” என்றல் கூறியது கூறல் ஆகாதோ? என, ஆகாதபடி
பொருள்
அருளிச்செய்கிறார் “பூண்புனைமென்முலை” என்று தொடங்கி.
5.
“பூண்புனை மென்முலை” என்று விசேடிக்கிற திருத்தாயாருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
‘மலராள்’ என்று தொடங்கி. இது,
மூன்றாந் திருவந். 3.
|