அ
அணைந்து பிரிந்த இவ்
வுடம்புகொண்டு பிழைக்க ஒண்ணாது என்னுமிடம் தாமே அறிவாரே அன்று. ஒருத்தி - 1‘இன்ன
காட்டிலே மான்பேடை கிடந்து உழற்றாநின்றது’ என்றால், எய்தவன் கை உணருமன்றோ. ஒருத்தி
உருகும் - 2எதிர்த்தலைக்கு இது இல்லை என்னுமிடம் அறிவியுங்கோள். உணர்த்துமினே
- 3தாம் இத்தலையை மறந்தமையை நினைவூட்டுங்கோள். உணர்த்தி அற்றாரை உணர்த்த
வேணுமே. 4அறியாதாரை அறிவித்தல் அன்னத்துக்கே பணியன்றோ; பண்டும் பிறங்கு
இருள் நிறம் கெட அன்னமாயன்றோ அருமறை பயந்தது. அன்றிக்கே, 5ஒருத்தி படும்பாடே
என்று சொல்லுங்கோள் என்பாள் ‘ஒருத்தி உருகும் என்று உணர்த்துமின்’ என்கிறாள் என்னுதல்.
(4)
557.
உணர்த்தல் ஊடல் உணர்ந்து
உடன்மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல்
சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்
துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய்
அடியேனுக்கும் போற்றுமினே.
பொ-ரை :-
உணர்த்தலின் அருமையையும் ஊடலின் அருமையையும் உணர்ந்து பிரியாமல் சேர்ந்தே மேய்கின்ற
இளமைபொருந்திய அன்னங்காள்! திணுங்கின வண்டல்களிலே மேலே சங்குகள் சேர்ந்திருக்கின்ற திருவண்வண்டூரிலே
எழுந்தருளியிருக்கின்ற, தொடுக்கப்பட்ட பூக்களை
1. “ஒருத்தி” என்றால், தெரியுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இன்னகாட்டிலே’ என்று தொடங்கி. முதற்பத்து ஈட்டின்
தமிழாக்கம்,
பக். 140. காண்க.
2. “ஒருத்தி
உருகும்” என்பதற்கு, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘எதிர்த்தலைக்கு’ என்று தொடங்கி.
3. முற்றறிவினனுக்கு
உணர்த்தவேண்டுமோ? என்ன, ‘தாம் இத்தலையை’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
அதனை விவரணம்
செய்கிறார் ‘உணர்த்தி அற்றாரை’ என்று தொடங்கி.
4. எங்களுக்குத் தொழில்
இதுவேயோ? என்ன, ‘அறியாதாரை’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். அறிவித்ததற்குப்
பிரமாணம்
காட்டுகிறார் ‘பண்டும்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி, 5. 7 : 3.
5. “ஒருத்தி” என்பதற்கு,
மூன்றாவதாக வேறும் ஒரு கருத்து
அருளிச்செய்கிறார் ‘ஒருத்தி’ என்று தொடங்கி.
|