முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
282

அச

அசிந்த யித்வா துக்காநி - விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத்தான் நினையாநின்றாளோ? 1இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது. ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் - ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது. 

    2
புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான். ஸ்நுஷயாச விவர்ஜிதம் - ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி 3குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி. அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் - 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது. 5“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது. திருத்தாயாரும் இம்மாளிகையைக் கண்டு

 

1. “கன்னகு திரள்புயக் கணவன் பின்செல
   நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”

  என்றார் கம்பநாடரும்.

(கிளைகண்டு நீங். 87.)

2. மகள் புறப்பட்டுப் போன பிறகு திருமாளிகை இருந்ததற்குத்
  திருஷ்டாந்தமும், அந்தத் திருஷ்டாந்த சுலோகத்திற்குப் பொருளும்
  அருளிச்செய்கிறார் ‘புத்ரத்வய’ என்று தொடங்கி.

  “புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
   அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.

3. ‘குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி’ என்றது, பாதுகாக்கப்
  படவேண்டியவர்களையும் கூடக்கூட்டிக்கொண்டு போனபடி என்கை.
  என்றது, பை நெகிழ்ந்த கயிறு எல்லாம் கட்டிப் பண்டங்களை
  எடுத்துக்கொண்டு போகும் செட்டிகளைப் போலே, தங்களுக்கு ரக்ஷ்ய
  வர்க்கமான பிராட்டியையும் கூட்டிக்கொண்டு போனார்கள் என்றபடி.

4. பிராட்டிக்கு நிலவையும், இளையபெருமாளுக்கு நக்ஷத்திர தாரா
  கணங்களையும், பெருமாளுக்குச் சந்திரனையும் ஒப்பாகக் கொள்க.

5. வேறும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நல்லதோர் தாமரைப் பொய்கை’
  என்று தொடங்கி.

  நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
  அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
  இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
  மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.

 
என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.