முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
284

619

619

        உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
        கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
        மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
        திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.

   
பொ-ரை :- உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும் கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.

    வி-கு :- “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை” என்று அவ்வவற்றிற்குரிய சிறப்புத் தொழிலாற் கூறப்பட்டுள்ளமை நோக்கல் தகும். என் இளமான் என்று என்றே கண்கள் நீர்மல்க, வளமிக்கவன் சீரையும் ஊரையும் விடவிப் புகும் ஊர் திருக்கோளூரே; இது திண்ணம் என்க. வளமிக்கவன் : பெயர்.

    இத்திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

    ஈடு :- முதற்பாட்டு. 1தன் வயிற்றிற் பிறப்பாலும், இவளுடைய தன்மையாலும் இவள் இங்கு நின்றும் போய்ப் புகும் ஊர் திருக்கோளூர் என்று அறுதியிடுகிறாள்.

    உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் - 2இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் தேடிப் போனாளோ. என்றது, இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கேபுக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி. “அஹம் அந்நம், அஹமந்நாதா: - நான் பகவானுக்கு இனியன், 3நான் பகவானாகிய இனிமையை

 

1. “திண்ணம் என் இளமான்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘திருக்கோளூர் ஏறப் போனாள்’ என்று சொல்லுகிற திருத்தாயார்,
  “உண்ணும்சோறு” என்று தொடங்கி இவளுடைய தேகயாத்திரையைச்
  சொல்லுவதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவள் அவ்வருகே’ என்று
  தொடங்கி. ‘வாய்புகுநீர்’ என்றது, உச்சிவரையிலும் அநுபவிக்கிற அநுபவம்.
  மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘இங்கு இருந்த நாள்’ என்று
  தொடங்கி.

3. ‘நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன் என்றிருப்பார்க்கும்’
  என்றது, “அஹமந்நாத:” என்னும் சுருதியில் சொல்லுகிற நித்தியசூரிகள்
  அநுபவம் இங்கே உண்டாயிருப்பார்க்கும் என்றபடி.