வன
வன்றோ அடுப்பது.
1‘அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ’ என்று சேதனராகில் மங்களாசாசனம் செய்யக்கடவது.
2நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அறையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன்.
அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது; ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க்
கண்ணும் கண்ணநீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச்செய்வர்.
3ஆஹ்லாத
ஸீதநே்த்ராம்பு:-விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக்கண்ணீர் போலன்றிக்கே, பகவானை
அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாவது புளகீக்ருத காத்ரவாந்
- உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது. பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது,
தெய்வம் ஏறினவரைப்போலே. அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும்
பார்க்கத் தகுந்தவன். சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கையாயிற்று. ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும்
காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ? ‘அளந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே
பயிர்த்தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு, உம்முடைய ஊர் எது’ என்று கேட்க,
‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன, ‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேகயாத்திரை
நடவாமே போந்தேன்’ என்ன, அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ? நிலை நின்ற
ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.
1. கண்டு கொண்டிருத்தலே
அன்றி மங்களாசாசனமும் செய்ய வேண்டும்
என்கிறார் ‘அழுநீர்’ என்று தொடங்கி. இது, திருவிருத்தம்,
பா. 2.
2. கண்ணும் கண்ணீருமாய்
இருக்கிற இருப்பைக் கண்டுகொண்டிருத்தலே
புருஷார்த்தம் என்கைக்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்
‘நஞ்சீயர்’ என்று
தொடங்கி.
3. மேலே கூறியதற்குப் பிரமாணமும்,
பிரமாணத்திற்குப் பொருளும்
அருளிச்செய்கிறார் ‘ஆஹ்லாத’ என்று தொடங்கி.
“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு:
புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய:
ஸர்வதேஹிபி:”
என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.
4. ஈசுவரனே தாரக போஷக போக்யங்கள் எல்லாமாக இருப்பான் என்பதற்கு
ஐதிஸ்யம் காட்டுகிறார் ‘அனந்தாழ்வான்’
என்று தொடங்கி.
|