அவனு
அவனுடைய திருவார்த்தை.
1பரமபதத்தைக் காட்டிலும் அடியார்கள் இருந்த இடம் அன்றோ ஊராகிறதும், அவன் திருவுள்ளத்துக்குப்
பொருந்தியிருப்பதும். வளம் மிக்கவன் - 2பிரணயதாரையில் சாமர்த்தியத்தையுடையவன்
என்றுமாம். இப்போது சாமர்த்தியமாவது, தான் இருந்த இடத்தே இவள் வரும்படி இத்தலையை அழித்தது.
வினவி-3‘திருக்கோளூர்
எத்தனை இடம் போரும்’ என்று எதிரே வந்தாரைக் கேட்டு, அவர்கள் ‘இன்னதனை இடம் போரும்’ என்ன,
அதுதானே வழிக்குத் தோட்கோப்பாகப் போகை. “தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திருநாம சங்கீர்த்தனமானது
வழிக்குக் கட்டுச்சோறாகும்” என்றார் பிறரும். 4பூ அலரும்போதைச் செவ்வி போலே
‘திருக்கோளூர் எத்தனை இட்ம போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில் செவ்வி காணப்பெற்றிலேன்
என்று காணும் திருத்தாயார்தான் நோவுபடிகிறது. என் இளம் மான் புகும் ஊர் திருக்கோளூரே -
5என் வயிற்றிற் பிறப்பாலும் இவளுடைய தன்மையாலும் அவ்வூரில் அல்லது புகாள் என்கிறாளாயிற்று.
இந்நிலை விரைவின் எய்தாது
இத்துணை தாழ்த்தியாயின்
நன்னுதற் சீதையால்என் ஞாலத்தாற்
பயன் என் நம்பி
உன்னையான் தொடர்வன் என்னைத்
தொடருமிவ் வுலகம் என்றால்
பின்னைஎன் இதனைநோக்கி
விளையாடிப் பிழைப்ப செய்தாய்.
என்பது கம்பராமாயணம், மகுடபங்கப்படலம்.
1. மேற்கூறியவற்றால் பலித்த
பொருளை அருளிச்செய்கிறார் ‘பரமபதத்தைக்
காட்டிலும்’ என்று தொடங்கி.
2. “வளம்” என்பதற்கு, செல்வம்
என்று மேலே பொருள் அருளிச்செய்தார்.
இங்கு, சாமர்த்தியம் என்று வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார்
‘பிரணயதாரையில்’ என்று தொடங்கி.
3. திருக்கோளூரிற்குச் சென்றால்,
வறிதே செல்லாது, வினவிக் கொண்டு
செல்வதற்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘திருக்கோளூர்’ என்று தொடங்கி. வினவுதல், வழிக்குத் தோட்கோப்பாக
இருப்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘தாமரைக் கண்ணனாகிய’ என்று
தொடங்கி.
“பாதேயம் புண்டரீகாக்ஷ நாம
சங்கீர்த்தநாம்ருதம்.
என்பது.
4. “வினவிப் புகுமூர்” என்று
வினவுகிறதைச் சொல்கிற திருத்தாயாருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘பூ அலரும் போதை’
என்று
தொடங்கி.
5.
‘திருக்கோளூரிலே புகும்’ என்பது, எதுகொண்டுநிச்சயிக்கிறாள்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘என் வயிற்றில்’ என்று தொடங்கி.
|