New Page 1
போலே இருக்க வெளிறும்
காழ்ப்புமாகச் சொல்லி, தாய் வழியை நினைத்து அசிர்த்தார் அன்றோ ஸ்ரீகுகப்பெருமாளும்.
அப்படியே, இவளும்
தன்வயிற்றிற் பிறந்த சுத்தியே காரணமாகத் ‘திருக்கோளூரிலேபுகும்’ என்று அறுதியிடுகிறாள்.
3இராம பாணம் இலக்குத் தப்புமோ! என் மகள் புகும் ஊர் அதுவே என்கிறாள். இளமான்
- 2இப் பருவத்தில் இவளைத் தல்கு அறுக்கும்போது அவ்வூரில் அவனேயாக வேண்டாவோ?
என் இளமான் - கிரமத்திலே அடைவதைப் பொறுக்காதவள். தன் மிருதுத்தன்மை பாராமல் பதறிக்கொண்டு
போனாள். புகுமூர் - 3காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப்
புகுமாறு போலே, சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை
பொய்கையும் பொழிலும் போலே அன்றோ. புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர்
அன்று என்கை. 4எம்பெருமானார் தெற்கே எழுந்தருளாநிற்க, எதிரே வருகிறாள்
ஒரு பெண் பிள்ளையைக் கண்டு ‘எங்கும் நின்றும்?’ என்ன, ‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன,
‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக்கடவராய் இருப்பர்களோ?’ என்று அருளிச்செய்தார். என் இளமான்
மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் - இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே,
இது நிச்சயம். 5இவ்வூரில் பிள்ளைகளைக் காணாவிட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை
அன்றோ.
(1)
என்றபடி. அசிர்த்தார் - ஐயப்பட்டார்.
இங்கு, கம்பராமாயணம் குகப்படலம்
14-முதல் 32-முடிய உள்ள செய்யுட்களைப் படித்து அறிதல் தகும்.
1. “என்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘இராமபாணம்’ என்று
தொடங்கி.
2. “இளமான்” என்பதற்கு
மூன்று வகையாக, பாவம் அருளிச்செய்கிறார்
‘இப்பருவத்தில்’ என்று தொடங்கி. தலக்கு - நாணம்.
3. “புகும் ஊர்” என்பதற்கு,
சுவாபதேசத்திலே பாவம் அருளிச்செய்கிறார்
‘காட்டுத் தீயிலே’ என்று தொடங்கி.
4. ‘போகும் ஊர் அன்று’
என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார்
‘எம்பெருமானார்’ என்று தொடங்கி.
5. எந்த
ஊர் சென்றாள் என்பதனை அறியாத இவள் “திண்ணம்” என்கிறது,
எங்ஙனே? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவ்வூரில்’ என்று
தொடங்கி.
|