1
620
ஊரும் நாடும் உலகமும்
தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக்
கற்பு வான்இடறிச்
சேரும் நல்வளம் சேர்பழனத்
திருக்கோளூரிக்கே
போருங் கொல்?
உரையீர் கொடியேன் கொடி பூவைகளே!
பொ-ரை :- ஊரிலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களும் உலகத்திலுள்ளவர்களும்,
தன்னைப்போலவே, அவனுடைய திருப்பெயர்களையும் திருமாலைகளையும் பிதற்றும்படியாக, சிறந்த கற்பினையும்
காற்கடைக்கொண்டு, நல்ல வளப்பங்கள் சேர்ந்திருக்கின்ற வயல்களையுடைய திருக்கோளூர் என்னும்
திவ்வியதேசத்திற்குச் சென்று சேர்கின்ற, கொடியேனுடைய பூங்கொடி போன்ற என்மகளானவள் மீண்டு
வருவாளோ? சொல்லுங்கோள் என்கிறாள்.
வி-கு :-
பூவைகாள்! ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றத் திருக்கோளூர்க்குச் சேரும் கொடியேன் கொடி போருங்கொல்?
உரையீர் என்க. கற்பு வான் இடறித் திருக்கோளூர்க்குச் சேரும் கொடி என்க. பூவை - ஒருவகைப்
பறவை. போரும் - போதருதல்.
ஈடு :-
இரண்டாம்பாட்டு. 1திருக்கோளூர்க்கே
போய்ப் புக்க என் பெண்பிள்ளை மீண்டும் வருமோ? சொல்லீர்கோள் என்று பூவைகளைத் திருத்தாயார்
கேட்கிறாள்.
ஊரும் நாடும்
உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற - 2இந்த இருப்பில் என்ன
குறை உண்டு? இங்கே ஒரு குறை உண்டாய், அங்கே அது தீரப் போனாளோ? இங்கே, போதயந்த: பரஸ்பரம்
பண்ணுகைக்கு ஆள் இல்லாமை “எங்குப் பழையர்களாய் விளங்குகின்ற சூரிகள் வசிக்கின்றார்களோ”
என்று ஓதப்படுகிற ஒரு தேச விசேடம் தேடிப் போனாளோ?
1. “திருக்கோளூர்க்கே
போருங்கோல்” என்பது போன்றவைகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
“போருங்கோல்” என்பதற்கு
அருளிச்செய்யும் மூன்றாவது அர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றி இந்த
அவதாரிகையை அருளிச்செய்கிறார்.
2. “ஊரும்.
. . . . .பிதற்ற” என்பதற்குக் கருத்துரையாக அருளிச் செய்கிறார்
‘இந்த இருப்பில்’ என்று தொடங்கி.
இதனை விவரணம் செய்கிறார் ‘இங்கே’
என்று தொடங்கி. போதயந்த: பரஸ்பரம் பண்ணுதல் -
ஒருவருக்கு ஒருவர்
அறிவித்தல். “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷசூக்தம்.
|