முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
293

1

1“குற்றமற்றவனாய்ப் பூர்ண சாம்யத்தை அடைகிறான்” என்று அவன் அங்குள்ளாரைத் தன்னோடு ஒத்தவர்களாயிருக்கும்படி செய்தாற்போலே அன்றோ, இங்குள்ளாரை இவள் தன்னோடு ஒக்கப் பண்ணினபடி. ஊரும் நாடும் உலகமும்-2 தான் இருந்த ஊரும் அதனோடு தோள் தீண்டியான நாடும் அதனோடு சேர்ந்த உலகமும். ஸ்ரீராமாவதாரத்திலும் ஓர் ஊரேயன்றோ திருந்திற்று; இங்குச் சம்சாரமாகத் திருந்நிற்றுக் கண்டீர் என்கை. 3இன்று நம்மளவும் வர வேறிப் பாயும்படி அன்றோ இவள் சம்பந்தம் வெள்ளம் இட்டபடி. 4“பகவத் பக்திக்கு மேட்டுமடையான சம்சாரத்திலே ஈசுவர அவதாரம் போலே ஸ்வயம் பிரயோஜனமாக அவதரித்தவராய்ப் பரமப் பிரயோஜன ரூபமாய் நிறைவுற்றிருக்கின்ற பக்தி யோகத்தையுடையவர்’ என்னும்படியே, எல்லா மேடுகளிலும் ஏறிற்று என்கை. 5காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி - சிற்றஞ் சிறு காலையிலே பறவைகளுங் கூட எழுந்திருந்து, அவன் இவள் பக்கல் பிச்சு ஏறி வரும்படியைச் 

 

1. “தன்னைப்போல்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘குற்றமற்றவனாய்’
  என்று தொடங்கி.

  “புண்யபாபே விதூய நிரஞ்சந: பரமம் ஸாம்யம் உபைதி”

  என்பது, முண்டகோபநிடதம். 3 : 1.

2. “ஊரும் நாடும். . . . . . . . .பிதற்ற” என்பதற்குத் தாத்பர்யத்தாலே சிந்தித்த
  பொருளை ‘இவ்விருப்பில்’ என்று தொடங்கி மூன்று வாக்கியங்களால்
  அருளிச்செய்து, சொற்களுக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘தான் இருந்த
  ஊரும்’ என்று தொடங்கி. இதனினின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார் ‘ஸ்ரீ
  ராமாவதாரத்திலும்” என்று தொடங்கி.

3. அப்படித் திருந்திற்றோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இன்று
  நம்மளவும்’ என்று தொடங்கி.

4. இப்படிச் சம்சாரம் முழுதும் திருந்துகையாலே ஆழ்வார் கிருபைக்கு
  மேட்டு மடையாய் இருப்பார் இலர் என்னுமதனைப் பிரமாணத் தோடு
  அருளிச்செய்கிறார் ‘பகவத் பக்திக்கு’ என்று தொடங்கி.

  “லோகே அவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
   யோகாய நாதமுநயே யமிநாம் வராய”

  என்பது, தோத்திரரத்நம். 3.

5. திருந்தியதன் சரமாவதியை (முடிவின் எல்லையை)க் காட்டுகிறார் ‘காலை
  எழுந்திருந்து’ என்று தொடங்கி. இது, நாய்ச்சியார் திருமொழி. 9 : 8.
  இதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘சிற்றஞ்சிறு காலையிலே’ என்று
  தொடங்கி. “மால்” என்பதற்கு, வியாமோகத்தையுடையவன் என்றும், அறப்
  பெரியவன் என்றும் இரண்டு பொருள். முதற் பொருளின் விவரணம்
  ‘அவன் இவள்பக்கல்’ என்று தொடங்கும் வாக்கியம். இரண்டாவது
  பொருளின் விவரணம், ‘தான் இருந்த இடத்தே’ என்று தொடங்கும்
  வாக்கியம்.