முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
294

New Page 2

சொல்லாகின்றன. தான் இருந்த இடத்தே செல்ல வேண்டுமவன் இவள் இருந்த இடத்து ஏற வரும்படியைச் சொல்லி.

    தன்னைப்போல் அவனுடையபேரும் தார்களுமே பிதற்ற - 1அவன் மயர்வுஅற மதிநலம் அருள வந்த பிதற்றே அன்றோ இவளது; இவள்தான் அடியாக வந்த பிதற்றே அன்றோ இவர்களது; பிதற்று தலாவது, நினைத்துச் சொல்லுகை அன்றியே, பகவானுடைய குணங்களிலே மூழ்கி உணர்த்தி அற்றுச் சொல்லுதல். 2“இந்த அர்த்தமானது ஜமதக்னியின் பிள்ளையான பரசுராமனுடைய பிதற்றுதலில் நின்றும் கேட்கப்பட்டது” என்கிறபடியே. அவனுடைய பேரும் தார்களும் பிதற்றுதலாவது,3 “சங்கென்னும் சக்கரமென்னும் துழாயென்னும்” என்பது, “தேவதேவபிரான்” என்பது, “விரைமட்டு அலர் தண்துழாய்” என்பதாகை. வான்கற்புஇடறி-4 வானான கற்பை இடறி. சூருவரால் கடக்க ஒண்ணாத மரியாதையைக் கடந்து. மலை போல இருக்கிற மரியாதையை, காற்கீழே அகப்பட்ட தொரு சிறிய கல்லை இடறுமாறு போலே இடறி. 5பெருவெள்ளமானது, சிறிய கரைகளோடு பெரிய கரைகளோடு வாசி அற ஏறுமாறுபோலே, நாணம் மடம் அச்சம் தொடக்க மானவற்றை மதியாதே போதல்.

 

1. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தன்னைப் போல், ஊரும் நாடும்
  உலகமும் பிதற்றக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அவன் மயர்வற’ என்று தொடங்கி. இதனால், அவன்
  மயர்வற மதிநலம் அருளினது இவள் ஒருத்தி அளவிலே சுவறிவிட்டது;
  இவள் மயர்வற மதிநலம் அருளினது எல்லார்க்குமாய்விட்டது
  என்பதனைத் தெரிவித்தபடி.

2. உணர்த்தி அற்றுச் சொல்லுகைக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இந்த
  அர்த்தமானது’ என்று தொடங்கி.

  “ஸ்ருதோயம் அர்த்தோ ராமஸ்ய ஜாமதக்ந்யஸ்ய ஜல்பத:”

  என்பது, பாரதம் மோக்ஷதர்மம். 34.

3. “பேரும் தார்களும்” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
  “சங்கென்னும்” என்று தொடங்கி. “சங்கென்னும்” என்பது, திருவாய்.
  4. 2 : 9. “தேவ தேவபிரான்” என்பது, திருவாய். 6. 5 : 2. “விரை மட்டு”
  என்பது, திருவாய். 2. 4 : 9.

4. வானான-வலியதான. கற்பு-மரியாதை. கற்பிற்கு வலிமை ஏது? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒருவரால்’ என்று தொடங்கி. அதனை
  ஓர் எடுத்துக்காட்டுமூலம் விளக்குகிறார் ‘மலைபோலே’ என்று தொடங்கி.

5. கடக்கமுடியாததான மரியாதையை மீறியதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
  ‘பெருவெள்ளம்’ என்று தொடங்கி.