1
1போருங்கொல்
என்றது, புகுங்கொல் என்றபடி. அன்றிக்கே, இவளுக்கு முன்னே தன் நெஞ்சு முற்பட்டபடியாய், அங்கே
இருந்து வழியில் ஒரு குறையும் இன்றியிலே அவள் வருமோ? என்கிறாளாகவுமாம். அன்றிக்கே, நல்வளம்
சேர் பழனம் திருக்கோளூர்க்கே சேரும் கொடி போருங்கொல்? என்று கூட்டி, பூவைகாள் உரையீர் என்னலுமாம்.
என்றது, மீண்டு புறப்பட்டு வரவல்லளோ? சொல்லீர் கோள் என்கிறாள் என்றபடி.
கொடியேன் -
இவளைப் பெறுகைக்குப் புண்ணியம் செய்து வைத்து, இவள் அளவினை உங்களைக் கேட்கவேண்டும்படியான
பாவத்தைச் செய்துள்ளேன். கொடி-கொள்கொம்பை ஒழியில் தறைப்படும். 2கோல்தேடி
ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும்மனம் அன்றோ. அன்றிக்கே, 3பெற்ற
என்னையும் விட்டு வேறேயும் ஒரு பற்றுக்கோடு உண்டாம்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்பாள்
‘கொடியேன்கொடி’ என்கிறாளாகவுமாம். 4பெற்ற தாயாரை விட்டு அகலுதல்
குடியின் தன்மை போலே காணும். பூவைகாள் போருங்கொல் உரையீர் - பெற்ற தாயரை விடலாம்; அத்தனை
அல்லது, பிறந்தாரைக் கைவிடப் போகாது என்றிருக்கிறாள் காணும் தன்னை இட்டு. போக்குவரத்து
எனக்கு அன்றோ சொல்லலாகாது, உங்களுக்கு ஒதுக்காதே சொல்லுமே; வயிற்றிற் பிறந்தார்க்கு ஒளிப்பார்
இலரே. உரையீர்-5 அவள் சொல்லிப் போகச் செய்தே இவை
1. “போருங்கொல்” என்றதற்கு,
மூன்று வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘போருங்கொல் என்றது’ என்று தொடங்கி. ஆக,
புகுங்கொல் என்றும், வருங்கொல் என்றும், மீண்டு புறப்பட்டு வர
வல்லளோ என்றும் மூன்றுவகையாகப்
பொருள் அருளிச்செய்தபடி.
2. ‘கொள்கொம்பு ஒழியில்
தறைப்படும்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘கோல்தேடி’ என்று தொடங்கி. இது இரண்டாந்
திருவந். 27.
3. “கொடி” என்பதற்கு, வேறும்
ஒருபொருள் அருளிச்செய்கிறார் ‘பெற்ற
என்னையும்’ என்று தொடங்கி.
4. பெற்ற தாயான தனக்குச்
சொல்லாளோ? இவற்றைக் கேட்கிறது என்?
என்ன, ‘பெற்ற தாயரை’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘தன்னை இட்டு’ என்றது, தன்மகளுக்குத் தான்
மறையாதே சொல்லுமாறுபோலே,
தன்னாலே வளர்க்கப்பட்ட இவற்றுக்கு
மறையாதே சொல்லிப் போம் என்று கேட்கிறாள் என்றபடி.
கருத்துப்
பொருள், ‘போக்குவரத்து’ என்று தொடங்கும் வாக்கியம்.
5.
“உரையீர்” என்று நியமிக்கிறது என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அவள்
சொல்லிப் போக’ என்று தொடங்கி.
|