முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
298

பூ

    பூவை. . . . . .எழும் என்பாவை - 1வேறு ஒன்று கொண்டு பொழுதுபோக்கும் பருவத்திலும் திருநாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கண்டீர் போனாள். இங்கு இருந்த நாள் மற்றொன்று தாரகமாய், அங்கே சென்று அவனாலே தரிக்கப்போனாளோ. 2பூவை தொடக்கமான லீலையின் உபகரணங்களால் பிறக்கும் உவகை எல்லாம் துவயத்தின் படியே ஸ்ரீய:பதி (திருமகள் கொழுநன்) என்கிற திருநாமத்தைச் சொல்ல அதனாலே உண்டாகா நின்றது. 3“‘ஊரும்நாடும் உலகமும் தன்னைப்போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று, பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதைபுட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன, அங்ஙனேயோ என்று இசைந்து போனார். நன்று; அவன் திருநாமங்களை இவற்றிற்கு இட்டு அழைத்ததாகக்கொண்டாலோ? என்னில், “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்றிருக்கிற அளவுகடந்த ஈடுபாட்டிற்கு4 இதுசேராது. 5அன்றிக்கே, பூவை பைங்கிளிகள். . . . . .எழும் என்பதற்கு, திருநாமச்சுவடு அறிந்த பின்பு விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல்

 

1. கருத்துப்பொருள் அருளிச்செய்கிறார் ‘வேறு ஒன்று கொண்டு’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘இங்கு இருந்த’ என்று தொடங்கி.

2. “பூவை. . . . . .என்பாவை” என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘பூவை தொடக்கமான’ என்று தொடங்கி. யாவையும் - எல்லாவற்றாலும்
  பிறக்கும் மகிழ்ச்சி எல்லாம். எழும் என் பாவை - உண்டாகா நின்றுள்ள
  என் பாவை என்றபடி.

3. பெற்றி என்னும் பெரியார் ஒருவருடைய நிர்வாகத்தையும், அவர் கூறும்
  நிர்வாகம் பொருந்தாமையையும் காட்டுகிறார் ‘ஊரும் நாடும்’ என்று
  தொடங்கி. பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து
  என்றும், “எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.

4. ‘இது சேராது’ என்றது, வேறு ஒன்றால் காலக்ஷேபம் பண்ணுகை என்பது
  சேராது என்றபடி.

5. “பூவை. . . . . .என்பாவை” என்பதற்கு, வேறும் ஒரு கருத்து
  அருளிச்செய்கிறார்‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, திருமால்
  திருநாமங்களைக் கூவி, “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர்தோள்
  கைவிட்டு” என்கிறபடியே, பூவை தொடக்கமான எல்லாவற்றையும் இகழும்
  என் பாவை என்றபடி. இங்கே, “ஏழும்” என்றதற்கு, அவற்றை விட்டு எழும்
  என்று பொருள் கொள்க.