முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
299

இவளுக

இவளுக்குப் பொறுக்கக் கூடாத தாயிருக்கும் என்னுதல். 1ஸ்ரீ பரதாழ்வானுடைய ராஜ்யதரிசனம் அவனுக்குப் பொறுக்க முடியாமற்போனது போலே. 2சக்கரவர்த்திக்குச் சாஸ்திரார்த்தங்கள் செய்த அன்று நாயிறு பாடு, ‘கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு; அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்கவேணும்’ என்று சபையை அடைந்தான். அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்; இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக்கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’ என்று பார்த்து, மங்களத்தைக்கொடுக்கிற பல்லியங்களை முழக்கிக்கொண்டிருந்தார்கள்.

    இந்த முரச ஒலி செவிப்பட்டபோது “கருமாணிக்கமலை” என்னும் திருவாய்மொழியில் பிராட்டியின் சுயம்வரத்துக்கு மண முரசு அறைந்தபோது தோழி பட்டவெல்லாம் பட்டான். விலலாப சபா மத்யே - தனி இடத்தில் அன்றோ பறிகொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ சொரூபம்; சொரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது. ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே. புரோஹிதம் - இந்தக் குடிக்கு நாங்கள் கைவாங்கியிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச் சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது. சபாமத்யே ஜகர்ஹே-3“நிய மாதிக்ரமம் ரஹஸிபோதயேத்-தவறான செயலைத் தனி

 

1. இரண்டாவதாக மேலே கூறிய பொருளுக்குத் திருக்ஷ்டாந்தம் காட்டுகிறார்
  ‘ஸ்ரீ பரதாழ்வானுடைய’ என்று தொடங்கி.

2. ஸ்ரீ பரதாழ்வானுக்குப் பொறுக்கமுடியாததற்குப் பிரமாணம் காட்டுவதற்குத்
  தொடங்கி, அதற்கு அவதாரிகையும் பிரமாண சுலோகத்திற்குப் பொருளும்
  அருளிச்செய்கிறார் ‘சக்கரவர்த்திக்கு’ என்று தொடங்கி. சாஸ்திரார்த்தங்கள்
  - உத்தரக்கிரியைகள்; இறுதிக்கடன்கள். நாயிறுபாடு - சிற்றஞ் சிறுகாலை.

  “ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
   விலலாப ஸபாமத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
  “கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
   ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி”

  என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.

3. “ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்திபூர்வம்வா நியமாதிக்ரமம்
   ரஹஸி போதயேத்”

 
என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.