முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
302

இருப்புக்கண்டேன்; இலாபத்தோடே இருக்கும் இருப்புக் காணப்பெற்றிலேன் என்கிறாள்.

(3)

622

    கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
    சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
    செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
    மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.

   
பொ-ரை :- தோழியே! செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது அசையும்படியாகச் செல்லுதற்கு ஒருபட்டடாள்; பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்டுகளும் அயல் ஊரிலுள்ள பெண்டுகளும் வரம்பு அழிந்த செயலையுடையள் என்பர்கொலோ? குணத்தாலே மேம்பட்டவள் என்பர்கொலோ?

    வி-கு :-
கொல்லை - வரம்பு அழிந்த செயலையுடையவள்; உடையவன்: உயர்திணை இருபாற்கும் பொதுப்பெயர். சில்லை - பழிச்சொல். மல்கிக் கிடந்த திருக்கோளூர் என்க. மல்கி - மல்க. துடங்க மேவினள் என்க.

    ஈடு :- நாலாம்பாட்டு. 1இவளைக் கண்ட நாட்டார் குணம் இல்லாதவள் என்பர்கொலோ? குணங்களால் மேம்பட்டவள் என்று கொண்டாடுவர்களோ? என்கிறாள்.

    கொல்லை என்பர்கொலோ - 2இவள் வாசல் கடந்து புறப்படக்கடவதல்லாத மரியாதையைக் குலைத்தாள்: இவள் விலக்கிய செயலை மேற்கொண்டாள்; இவள் வரம்பு அழிந்த செயல்களைச் செய்தாள் என்பர்களோ? கொல்லை என்பது, வரம்பு இல்லாததற்குப் பெயர். குணம் மிக்கனள் என்பர்கொலோ - 3குணாதிகவிஷயத்துக்குப் போரும்படி செய்தாள் என்பர்களோ? கொல்லை

 

1. திருப்பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “கொல்லை” என்பதற்கு, வரம்பு அழிந்த செயல்களைச் செய்கிறவன் என்ற
  பொருளாகையாலே, அதனைத் தெளிவாக அருளிச்செய்கிறார் ‘இவள்
  வாசல் கடந்து’ என்று தொடங்கி.

3. ‘ருணாதிக விஷயத்துக்குப் போரும்படி செய்தாள்’ என்றது, குணாதிக
  விஷயத்துக்குத் தகுதியாகப் பிராவண்யத்தாலே மிக்காள் என்றபடி.