முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
307

நின்றாள்: இனி இருந்த நாம் என்கேட்கிறோமோ? 1இங்கு இருந்த நாள் நம்முடைய நல்வார்த்தையைக் கேட்கில் அன்றோ வழியிலுள்ளார் பழிகேட்பது அவள். 2இவள் வழிப்பட்டால் நல்வழியிலுள்ளார் வார்த்தை கேட்குமது ஒழியப் பெருவழியானார் வார்த்தை கேளாள்.

(4)

623

        மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
        தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
        பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
        ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?


    பொ-ரை :-
என்னுடைய இளமைபொருந்திய பெண்ணானவள், அவனை மனத்தாலே அடைந்து அதனாலே மனமும் சரீரமும் உருகக் குலைந்து விளையாடுதலைச் செய்யாள்; இனிச் சென்று, தனது திருமால் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோளூர் என்னும் திவ்விய தேசத்தில் இருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையும் குளங்களையும் அவனுடைய கோயிலையும் உயிர் குளிரும்படியாகக் கண்டு இன்று எப்படி மகிழ்கின்றாளோ?

    வி-கு :- என் சிறுத்தேவி மேவி நைந்து விளையாடல் உறாள்; இன்றுபோய் ஆவி உள் குளிரக் கண்டு எங்ஙனே உகக்குங் கொல்? என்க.

    ஈடு :- ஐந்தாம்பாட்டு. 3திருக்கோளூரில் சோலைகளையும் அங்குள்ள பொய்கைகளையும் அவன் திருக்கோயிலையும் கண்டால் எங்ஙனே உகக்குமோ? என்கிறாள்.

    மேவி-பகவானுடைய குணங்களிலே நெஞ்சினை வைத்து. நைந்துநைந்து - 4தான் பற்றியிருக்கும் பொருள்களை அழிக்கும்

 

1. வழியிலுள்ளார் கூறுகின்ற பழியைக் கேட்கில் மீளாளோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இங்கு இருந்தநாள்’ என்று தொடங்கி.

2. ஆனால், யார் வார்த்தையைத் தான் கேட்பாள்? என்ன, ‘இவள்
  வழிப்பட்டால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  ‘நல்வழியிலுள்ளார்’ என்றது, சில்லைவாய்ப்பெண்டுகளை,
  ‘பெருவழியானார்’ என்றது, அயற்சேரியிலுள்ளாரை.

3. “திருக்கோளூரில் பூவியல்பொழிலும்” என்பது போன்றவைகளைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

4. மேவினால் நையவேண்டுமோ? என்ன, ‘தான்பற்றியிருக்கும்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.