New Page 1
நெருப்புப்போலே குணங்கள்தாம்
அழிக்குமே: 1“நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்துகும்” என்பதேயன்றோ
மறைமொழி. 2இவள் மேவியது நிர்க்குணமாய் இருப்பது ஒரு விஷயத்தோடு அன்றே; உயர்வற
உயர்நலமுடையவனோடே அன்றோ. மேவி - 3இங்கு இருந்த நாளும் எங்களோடே பொருத்தம்
இல்லை கண்டீர். நைந்து நைந்து - 4நைந்து மீளமாட்டாள்; தரித்திருக்க மாட்டாள்.
விளையாடல் உறாள் - பருவத்துக்குத் தக்கதான விளையாடலை விட்டாள். 5விளையாடுகையைத்
தவிர்ந்து மேவி நைந்தாள் அன்று கண்டீர், 6இந்த விஷயத்திலே மூழ்கி, புறம்புள்ளவற்றை
விட்டாளத்தனை. “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு” - பகவானுடைய குணங்கள்
கொண்டு மூழுக, புறம்புள்ளது கைவிட்டாள். 7நல்லதும் தீயதுமானால், தீயது போல் அன்றே
நல்லது பண்ணிக்கொள்ளும்படி. 8“எவன் ஒருவன் பரம்பொருளிடத்தில் மிகுந்த பக்தியுடையவனாய்,
பரம்பொருளுக்கு வேறான விஷயங்களில் அன்பில்லாதவனா யிருக்கிறானோ அவன் எல்லா
1. குணங்கள் அழிப்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘நினைதொறும்’ என்று
தொடங்கி. இது, திருவாய். 9. 6 : 2.
2. “மேவி” என்றால்
ஈசுவரனோடு ஒழிய, குணங்களோடும் மேவி என்ற
பொருளைக் காட்டுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இவள் மேவியது’ என்று தொடங்கி.
3. “மேவி” என்பதற்கு, எதிர்மறை
முகத்தால் சித்திக்கும்பொருளை
அருளிச்செய்கிறார் ‘இங்கு இருந்த’ என்று தொடங்கி. என்றது
அவனோடு
மேவி என்கையாலே, இங்கிருந்த நாளும் எங்களோடு பொருத்தம் இல்லை
என்றபடி.
4. “நைந்து நைந்து” என்ற
அடுக்குத் தொடருக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘நைந்து மீளமாட்டாள்’ என்று தொடங்கி.
5. உலகத்துப் பெண்களினின்றும்
வேறுபடுத்திக் காட்டுவதற்குத்
தொடங்குகிறார் ‘விளையாடுகையை’ என்று தொடங்கி.
6. பின்னர் எப்படி இருந்தாள்?
என்ன, அதற்கு விடையும், விடைக்குப்
பிரமாணமும், பிரமாணத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார்
‘இந்த
விஷயத்திலே’ என்று தொடங்கி.
7. மற்றைப் படியாக ஆனாலோ?
என்னில், ‘நல்லதும்’ என்று அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
8. மேலதற்கே வேறும் இரண்டு
பிரமாணங்கள் காட்டுகிறார் ‘எவன் ஒருவன்’
என்று தொடங்கியும், ‘மனைப்பால்’ என்று தொடங்கியும்.
“பரமாத்மநி யோரக்த:
விரக்த: அபரமாத்மநி
ஸர்வேஷணா விநிர்முக்த:
ஸ: பைக்ஷம் போக்தும் அர்ஹதி”
என்பது, பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
“மனைப்பால்” என்பது, இரண்டாந்திரு. 42.
|