என
என்ற நிலை பிறந்ததாகில்,
இனி, அங்குப் போய் அநுபவிப்பது உண்டோ? தன் திருமால் திருக்கோளூரில் - 1அவள்
பக்கல் இருக்குமாறு போலே அன்றோ இவள் பக்கலிலும் அவன் இருக்கும்படி. 2உலகத்தில்
சேஷசேஷி பாவம்போல் அன்றே காதலி பக்கல் பரிமாற்றம். ஆதலாலே, “உலகத்திற்குத் தலைவன்”
என்கிறபடியே, பிரமாணத்தைப் பார்த்துப் பரிமாற ஒண்ணாது அன்றோ காதலர் விஷயத்தில். தனக்கு
எல்லாச் செல்வமான திருமால் திருக்கண்வளர்ந்தருளுகிற ஊரிலே.
பூ இயல் பொழிலும்
- 3தழையும் தண்டும் கொம்பும் கொடியுமாய்த துரலாய் இராமல், வெறும் பூவேயாயிருக்கை.
நித்திய வசந்தமான சோலை. தடமும் - அந்தப்பொழிலை வளர்ப்பதாய்ப் 4பரப்பு மாறப்
பூத்த தடாகமும். அவன் கோயிலும் கண்டு - 5“மா மணிக் கோயிலே வணங்கி” என்கிறபடியே,
அவனிலும் அவன் விரும்பி வாழ்கிற கோயிலையும் கண்களாரக் கண்டு. 6திவ்யாத்ம
சொரூபத்துக்குப் பிரகாசகமான திவ்வியமங்கள விக்கிரஹம்போலே, அவை இரண்டுக்கும் பிரகாசகமான
கோயில், கோயிலைக் கண்ட போதே உள் உண்டான பொருளையும் அறுதி இடலாயிருக்கை. உள்ளில்
பொன்னுக்குத் தக்க செப்பாயிருக்கும் அன்றோ. கண்டு -
1. “திருமால்” என்பதற்கு,
திருவினிடத்திற் போலே இவள் பக்கலிலும்
வியாமுக்தனாயிருக்கிறவன் என்று பொருள்கூறத் திருவுள்ளம்
பற்றி,
பாவம் அருளிச்செய்கிறார் ‘அவள்பக்கல்’ என்று தொடங்கி. அவள் -
பெரிய பிராட்டியார்.
2. அடியார்களிடத்திற் காட்டிலும்
திருவினிடத்தில் மாலான படி எப்படி?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘உலகத்தில்’ என்று
தொடங்கி.
3. “பூவியல்” என்று விசேடித்ததற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘தழையும்
தண்டும்’ என்று தொடங்கி. “பூ இயல்பொழில்” என்பது,
முக்காலவினைத்
தொகையாகையாலே, அதற்குத் தகப் பொருளை அருளிச்செய்கிறார் ‘நித்ய
வசந்தமான
சோலை’ என்று.
4. “பூ இயல்” என்னும்
அடைமொழியை, தடாகத்திற்கும் கூட்டுக
5. கோயில் என்னாமல்,
“அவன் கோயில்” என்று விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘மாமணிக்கோயிலே’ என்று தொடங்கி.
இது, பெரிய
திரு. 1. 1 : 6.
6.
“மணிக்கோயில்” என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘திவ்யாத்ம
சொரூபத்துக்கு’ என்று தொடங்கி.
இதனால், பலித்த பொருளை
அருளிச்செய்கிறார் ‘கோயிலைக் கண்டபோதே’ என்று தொடங்கி. தாம்
மேலே அருளிச்செய்த பொருளை உலக திருஷ்டாந்தத்திலே ஏறிட்டுக்
காட்டுகிறார் ‘உள்ளில்’ என்று
தொடங்கி.
|