இங
இங்கே இருந்து மானச
அநுபவமாத்திரமேயாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு. 1‘பிள்ளை திருநறையூர்
அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இட மாட்டாதே கண்களாலே
பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’
என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே நடக்கிறபோது,
திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர்
நகரான் கோயிலைப்பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.
ஆவி உள்குளிர -
இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே மேல்எழ அருளிச்செய்தாராய், அங்கே
இருந்தவரான 2சீராமப்பிள்ளை, ‘சீயா! எம்பார் அருளிச்செய்யும்படி
கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச்செய்தார். கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறுநனையும்படியா
யிருக்கை. எங்ஙனே உகக்கும்கொல் - 3இவள் பருவம் நிரம்பாதிருக்கச் செய்தே
புறம் புள்ளவற்றை விட்டு அவனை நினைத்து உருக்குலைகிறபோது அவ்வழகு கண்டு அநுபவிக்கப் பெற்றேன்;
அவனைக் கண்டு அநு
1. அவன் கோயிலைக் கண்களாலே
காண்கையே புருஷார்த்தம் என்பதற்கு
இரண்டு ஐதிஹ்யங்கள் காட்டுகிறார் ‘பிள்ளை திருநறையூர்
அரையரும்’
என்று தொடங்கியும், ‘ஆச்சானும்’ என்று தொடங்கியும். கிழக்கே
நடக்கிறபோது - திருக்குடந்தைக்கு
எழுந்தருளுகிறபோது. ஏறி - சென்று.
திருப்பேர் நகர் - ஒரு திவ்யதேசம்; திருவரங்கத்திற்கு கிழக்கே
இருப்பது.
2. சீராமப்பிள்ளை - பட்டருடைய
திருத்தம்பியார். ‘சீயந்’ என்பது,
பூஜ்யவார்த்தை.
“திருந்திய குணத்தினான்
இறைஞ்சிச் சீய என்று”
என்று மேருமந்தர புராணத்து வரும் தொடரில்
(638) இப்பொருளில்
இச்சொல் வழங்குதல் இங்கு அறியத்தகும். இப்பெயர், வைணவ
சந்நியாசிகட்குச்
சிறப்புப் பெயராக வழங்குகிறது. ஆனால், முற்காலத்தே
இப்பெயர் சிவாசாரியரான பிராமணர்கட்கும்
பயின்று வந்தது என்பது
“சோளகி மடத்து ஜீயர் சந்தானம்” புஷ்பகிரி ஜீயர், ஜீயர் விசுவேசுவர
சிவாசாரியர் என்ற சாசனத் தொடர்களால் தெளிவாம்.
(M.E.R.
364 of 1916.,
S.I.I.
vi, P. 193., புதுக்கோட்டைச்
சீமைச் சாசனத் தொகுதி, பக். 111.)
‘எம்பார்’ பட்டருடைய ஆசாரியர்; எம்பெருமானாருடைய
சிஷ்யர்.
முகந்துகொண்டு - மண்டி அநுபவித்துக்கொண்டு. முகந்து கொண்டு
அருளிச்செய்த இத்தால்
பலித் பொருளை அருளிச்செய்கிறார் ‘கமர்
பிளந்த’ என்று தொடங்கி.
3. “எங்ஙனே
உகக்கும் கொல்?” என்கிற திருத்தாயாருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘இவள் பருவம்’
என்று தொடங்கி.
|