முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
312

பவ

பவிக்கிறபோதை அழகு நான் கண்டு வாழப்பெற்றிலேன் என்கிறாள். இன்றே - எனக்குச் சோகத்தாலே சூந்யமாய்க் கிடக்கிற இன்று அவளுக்கு அநுபவத்தால் அடிக்கமஞ்சு பெற்றுச் செல்லுகிறதே! ஒருநாளிலே இப்படி ஆவதே! 1நாள்வாசி அற்று இருந்ததே அன்றோ விஷயாதீனமாய் வருகையாலே.

(5)

624 

        இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
        தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
        சென்றுதன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
        நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.

   
பொ-ரை :- இன்றையதினத்தில் எனக்கு உதவாமல் நீங்கிய என்மகளானவள், இதற்குமேல் சென்று தென்திசைக்குத் திலதத்தைப் போன்று விளங்குகின்ற திருக்கோளூர் என்னும் திவ்வியதேசத்தை அடைந்து, தன் திருமாலினுடைய திருக்கண்களையும் சிவந்த திருவாயினையும் கண்டு, நீண்ட தனது கண்களில் தண்ணீர் நிறையும்படியாக நின்றுநின்று வருந்தாநிற்பாள்.

    வி-கு :- இளமான் இனிப்போய்த் திருக்கோளூர்க்கே சென்று கண்டு பனிமல்க நின்று நின்று நையும் என்க.

    ஈடு :-
ஆறாம்பாட்டு. 2அவனுடைய சிநேகத்தின் மிகுதியைக் காட்டுகிற திருக்கண்கள் முதலாயினவற்றைக் கண்டு உவகையின் மிகுதியாலே உருக்குலைந்தவள் ஆவாள் அன்றோ என்கிறாள். இவள் தான் உகப்பது அங்கே புக்குத் தரித்து நிற்கவல்லவள் ஆனால் அன்றோ. அன்றிக்கே, “எங்ஙனே உகக்கும்கொல்” என்றாள் மேல்

 

1. நாள்வாசி - நாளின் குணம். ‘விஷயாதீனமாய் வருகையாலே’ என்றது,
  தனக்குப் பிரியமான பெண்ணைப் பிரிகையாலும், அவளுக்கு விருப்பமான
  நாயகனை அவள் பெறுகையாலும் என்றபடி.

2. மேலே “எங்ஙனே உகக்குங்கொல்?” என்றதற்குச் சேர இருவகையாக
  அவதாரிகை அருளிச்செய்கிறார். முதல் அவதாரிகையில், இவள்தான்
  உகப்பது அங்கே புக்குத் தரித்து நிற்கவல்லள் ஆனால் அன்றோ’
  என்றதன்பின், ‘அவனுடைய சிநேகத்தின்’ என்று தொடங்கும்
  வாக்கியத்தைக் கொணர்ந்து கூட்டிப் பொருள் காணல் வேண்டும். “தன்
  திருமால் திருக்கண்ணும்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
  மேற்கூறிய இரண்டு அவதாரிகைகளையும் அருளிச்செய்தவாறு.