முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
314

New Page 1

போலே; 1அல்லாத தாய்மாரைப் போலேயோ நான் தனக்கு இருப்பது? 2தன் உகப்பே எனக்கு உகப்பாக இருக்குமவளன்றோ நான். இவளுடைய காதலனுக்குக் கடகையும் தானே அன்றோ. “பிரான் இருந்தமை காட்டீனீர்” என்கிறபடியே 3“அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்” - பிள்ளைகாள்! பொகட நினைப்பார் பழி இட்டுப் போகவேணுமோ? அடியாரை நியமிக்கிறவர்கள் என்ன வேணுமோ? வழிக்குத் துணையாவாரை விலக்குகின்றவர்கள் என்று பொகடுவதே!

    அகன்ற - 4இப்படிக் கைகழியப்போவதே! 5ஒரு தேசத்தே நின்றுதான் உதவாது ஒழியப் பெற்றேனோ? இளமான் - 6‘பொகட்டது தாயை அன்றோ’ என்று அறிந்து மீளமாட்டாத

 

1. “எனக்கு” என்றதற்கு, சக்கரவர்த்தியினின்றும் வேறுபடுத்திப் பொருள்
  அருளிச்செய்தார் மேல். மற்றைத் தாயரில் நின்றும் வேறுபடுத்திப்
  பொருள் அருளிச்செய்கிறார் ‘அல்லாத தாய்மாரை’ என்று தொடங்கி.

      ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாய்
  எனத் தாய்மார் ஐவராதலின் ‘அல்லாத தாய்மார்’ என்கிறார். “ஐவர் நலன்
  ஓம்ப” என்பது, சீவக சிந். 363.

2. மற்றைய தாய்மாரைக் காட்டிலும் இவளுக்கு விசேடம் ஏது? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘தன் உகப்பே’ என்று தொடங்கி. அதற்குக்
  காரணத்தையும், பிரமாணத்தையும் அருளிச்செய்கிறார் ‘இவளுடைய’ என்று
  தொடங்கியும், ‘பிரான் இருந்தமை’ என்று தொடங்கியும். கடகை -
  சேர்க்கின்றவள்.

3. இப்படி, இவளை நாயகனோடே சேர்த்தவளாகத் தானிருந்தும், தனக்கு
  உதவாதே போவான் என்? என்ன, ‘தாய் தந்தையர்களாவார், நம்முடைய
  விருப்பத்துக்குத் தடை செய்பவர்கள் அன்றோ’ என்னும் அதி
  சங்கையாலே போனாள் என்று விடை கூறத் திருவுள்ளம்பற்றி, அதற்குச்
  சம்வாதம் காட்டுகிறார் ‘அன்னையும்’ என்று தொடங்கி. இதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘பிள்ளைகாள்’ என்று தொடங்கி. “அடியோமுக்கு”
  என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘அடியாரை’ என்று தொடங்கி.
  அதனை விவரணம் செய்கிறார் ‘வழிக்குத் துணை’ என்று தொடங்கி.
  “அன்னையும்” என்பது, பெரிய திருமொழி. 3. 7 : 7.

4. ‘இப்படிக் கைகழியப் போவதே’ என்றது, நாம் இருக்கிற ஊரிலே இராமல்
  தூரதேசத்திலே போவதே என்றபடி. இது, “அகன்ற” என்ற சொல்லுக்குப்
  பொருள்.

5. தூரதேசத்தே சென்றதற்கு வருந்துவது என்? இருக்கிற ஊரிலே இருந்து
  உதவாதிருந்தால் நல்லதோ? என்ன, ‘அது நல்லது அன்றோ’ என்கிறாள்
  ‘ஒரு தேசத்தே’ என்று தொடங்கி. என்றது, ஓர் ஊரிலே இருந்தால்
  மீண்டு வருவாள் என்று தரித்திருக்கலாம்; அது இல்லாதபடி தூரதேசத்தை
  அடைந்தாளே என்றபடி.

6. மகள் என்னாமல் “இளமான்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘பொகட்டது’ என்று தொடங்கி. அதனால் பலித்த பொருள், ‘இவளை நான்’
  என்று தொடங்குவது.