ப
பருவம் கண்டீர்! இவளை நான்
வெறுக்கிறது ஏன்? பருவம் அதுவானால் செய்யலாவது உண்டோ? இனிப் போய் - 3உறவு முறையாரில்
தாய்க்கு மேற்பட்டார் இலர் அன்றே! இப்படித் தாயுங்கூடப் புறம்பாம்படி அவன் பக்கலிலே பிறந்த
பாவபந்தத்துக்கு மேலே ‘அவ்வருகே ஒன்று உண்டு’ என்னப் போனாளோ? 2வந்தேறியைக்
கைவிட்டால் எப்பொழுதும் சித்தமாயிருப்பதற்குச் செய்யவேண்டுவது ஒன்று உண்டோ? தென் திசைத்
திலதம அனைய திருக்கோளூர்க்கே - 3‘தெற்குத்திக்கு’ என்று கொண்டு, ஆரியர்கள்
இகழ்ந்த மிலேச்சபூமி அன்றோ: இங்ஙனே இருக்கச்செய்தே, ஓர் ஆபரணம்தானே எல்லா ஆபரணங்களுக்கும்
நிறம் கொடுக்குமாறு போலே, திருக்கோளூர் உண்டாகையாலே திக்கு முழுதும் சிலாக்கியமானபடி;
4“புண்ணியமான சரித்திரங்களையுடைய அகத்திய முனிவராலே தெற்குத்திசையானது
அனைவருக்கும் புகலிடமாகச் செய்யப்பட்டது” என்னுமாறுபோலே. திருக்கோளூர்க்கே சென்று -
5திருத்தாயார்க்கு அரிதாய்த் தோற்றுகிறபடி. அவளுக்கு
1. “அகன்று இனிப் போய்”
என்கிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘உறவு முறையார்’ என்று தொடங்கி.
2. பாவபந்தம் உண்டானாலும்
அநுபவத்திற்கும் கைங்கரியத்திற்கும் போக
வேண்டாவோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘வந்தேறியை’
என்று தொடங்கி. வந்தேறியை - காரணம் பற்றி வந்த தாய் தந்தையர்
முதலானோரை.
3. “திலதம் அனைய” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘தெற்குத்திக்கு’
என்று தொடங்கி.
4. மேலே கூறியதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘புண்ணியமான’ என்று
தொடங்கி.
“தக்ஷிணா திக் க்ருதா யேந
சரண்யா புண்யகர்மணா
தஸ்ய இதம் ஆஸ்ரமபதம்
ப்ரபாவாத் அஸ்ய ராக்ஷஸை:
திக்இயம் தக்ஷிணா த்ராஸாத்
த்ருஸ்யதே நோபபுஜ்யதே”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.
இந்தச் சுலோகப்
பொருளோடு “துவராபதிப் போந்து நிலங்கடந்த
நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும்
பதினெண்கோடி
வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து, காடுகெடுத்து
நாடாக்கிப் பொதியிலின்கணிருந்து,
இராவணனைக் கந்தருவத்தாற்
பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி” என்ற
நச்சினார்க்கினியர்
உரை வாக்கியம் ஒப்புநோக்கல் தகும் (தொல். எழுத்.
சிறப்புப் பாயிரம்.)
5. போய் என்னாமல், “சென்று” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘திருத்தாயார்க்கு’ என்று தொடங்கி.
திருத்தாயார்க்கு அரிதாகத்
தோற்றினால், பெண்ணுக்கும் அரிதாக இராதோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அவளுக்கு’ என்று தொடங்கி. என்றது, வழியே
தொடங்கி உத்தேசியமாய்
இருக்கும் என்றபடி.
|