முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
317

தவறல

தவறல் லவை” என்றே அன்றோ இருப்பது. நெடும் கண்கள் பனிமல்கவே - இக்கண்களில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறும்படி தண்ணீர் உண்டாவதே! நின்று நின்று நையும் - மாறாமல் உருக்குலையாநின்றாள். கிண்ணகத்தில் இளகின கரைபோலே உடைகுலைப் படுகிறபடி. நெடும் கண்கள் பனி மல்கவே - 1நெஞ்சுக்கு உருகுதல் போலே காணும் கண்களுக்குக் கண்ணநீர். 2ஆனந்தக் கண்ணீரோடு சோகக்கண்ணீரோடு வாசி இல்லை அன்றோ. விலக்குமவை எல்லாம் பாதகமாகக் கடவது; 4“காணத்தக்கவன்” என்னும் விஷயத்தை நான் அனுபவிக்கப் பெற்றிலேன்.

(6)

625.

        மல்குநீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
        அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
        செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
        ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?

   
பொ-ரை :- என்னுடைய இளமான், பெருகுகின்ற தண்ணீரையுடைய கண்களோடு மயக்கம் பொருந்திய மனத்தினையுடையவளாகி நல்ல இரவும் நல்ல பகலும் நெடுமால் என்று அழைத்துக்கொண்டு, அதற்குமேல், செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு, வருந்தித் தளர்ந்து நடந்து சென்று எங்ஙனே புகுவாள் என்க.

    வி-கு :- அழைத்து, மனத்தினளாய்த் திருக்கோளூர்க்கு ஓல்கி ஒல்கி ஒசிந்து நடந்து போய் எங்ஙனே புகுங்கொல்? என்க, செல்வம் மல்கிக் கிடந்த திருக்கோளூர் என்ற இடத்தில் “மல்கி” என்பது, செய என் எச்சத்திரிபு.

 

1. “நையும்” என்றதனையும் கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘நெஞ்சுக்கு’
  என்று தொடங்கி.

2. “கண்டு, பனிமல்க” என்ற பதச்சேர்த்திக்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘காணப்புக’ என்று தொடங்கி.

3. ஆனந்தக் கண்ணீர் நல்லது அன்றோ? அதனைப் பகை என்னலாமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஆனந்தக் கண்ணீரோடு’
  என்று தொடங்கி.

4. “கண்டு” என்று தொடங்கி மகள் தன்மைகளைச் சொல்லுகிற தாயாருடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘காணத்தக்கவன்’ என்று தொடங்கி.