வ
வாராது ஒழிந்த இடம்
அவன் குற்றம் அன்று கண்டீர் என்பதனைத் தெரிவித்தபடி.
புணர்த்த பூந்தண்
துழாய் முடி நம்பெருமானைக் கண்டு - தொடுக்கப்பட்டு அழகியதாய்ச் சிரமத்தைப் போக்கக்கூடியதான
திருத்துழாயினைத் திருமுடியிலேயுடையவனாய், அதனாலே என்னைத் தனக்கே உரிமையாக்கினவனைக் கண்டு.
என்றது, 1நீங்கள் சென்று அறிவிக்குமித்தனையே வேண்டுவது; இங்குத்தைக்கு வருகைக்கு
ஒப்பித்தபடியே இருக்கிறவன் என்பதனைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, இத்தலையைத் தோற்பித்த
வேண்டப்பாடு தோற்றும்படி வளையம் வைத்து முதன்மை கொண்டாடி இருக்கின்றவனைக் கண்டு என்று பணிப்பர்
பட்டர். என்றது, தம் ஒப்பனையையும் முதன்மையையும் நம்மோடே காட்டியிருக்கிறவனைக் கண்டு
என்றபடி. புணர்த்த கையினராய் - 2அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கைஒத்துச்
செல்லுங்கோள்கண்டீர். என்றது, 3வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்;
4இல்லையாகில், 5“பரவசப்பட்டவர்களாய் நமஸ்காரம் முதலான காரியங்களைச்
செய்தார்கள்” என்கிற கண்
1. “புணர்த்த” என்றதற்கு,
பூர்வர்கள் நிர்வாஹத்திலே பாவம்
அருளிச்செய்கிறார் ‘நீங்கள் சென்று’ என்று தொடங்கி.
2. பட்டர் நிர்வாஹத்திலே
பாவம் அருளிச்செய்கிறார் ‘அங்கே சென்றால்’
என்று தொடங்கி. கை ஒத்து - அஞ்சலி செய்துகொண்டு.
3. “துன்பமொரு
முடிவில்லை; திசைநோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான்
பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்
என்பது, கம்பராமாயணம்.
(குகப்ப. 30.)
4. அங்கே சென்ற
பின்பு தொழுதால் வரும் குற்றம் யாது? என்ன,
‘இல்லையாகில்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
‘இல்லையாகில்’ என்றது, வழியே பிடித்துத் தொழுதுகொண்டு போகாமல்,
அங்கே
சென்ற பின்பு தொழுதீர்கோளாகில் என்றபடி.
5. “த்ருஷ்டாக்ருஷ்ணம்
ததாயாந்தம் ப்ரதிபந்தமிவ ஓஜஸா
யதார்ஹம் கேசவே
வ்ருத்திம் அவஸா: ப்ரதிபேதிரே”
என்பது. பாரதம் சபாபர்வம்.
‘பரவசப்பட்டவர்களாய்’
என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
நம்மழகு தொழுவிக்கத் தொழுதீர்கோளித்தனை;
“நநமேயம்” என்பதே
உங்களுக்கு நினைவு என்பது.
|