தூங
தூங்கினவன்” என்ற கிடை
அழகு காணவாயிற்று இவள் ஆசைப்பட்டுப் போயிற்று; 1“கிடந்ததோர்கிடக்கை” என்னக்கடவதன்றோ.
அவன் கிடந்த - 2அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து
அவன் கிடக்கும்படி ஆவதே! ஒல்கி ஒல்கி நடந்து - 3ஓர் அடியிலே பத்து அடி இடவேண்டும்படியாயிருக்கை.
ஒசிந்து - துவண்டு. சூல்கி ஒல்கி நடந்து ஒசிந்து எங்ஙனே புகுங்கொல் - ஒடுங்கி ஒடுங்கி நடந்து,
அது பொறாமல் துவண்டு, எங்ஙனே புகக்கடவளோ? நடந்து எங்ஙனே புகுங்கொல் - 4நடந்திலளாகில்
போய்ப் புகலாம் என்றிருக்கிறாள் காணும். 5அன்னமென்னடைப் பூங்குழலி யாகையாலே,
இவ்வன்ன நடைகொண்டு புகமாட்டாள் என்றிருக்கிறாள்.
(7)
626
ஒசிந்த நுண்ணிடைமேல்
கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க்
கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல
ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய்
எம்மை நீத்தஎம் காரிகையே.
பொ-ரை :- இன்பத்தால் துவண்ட பெரிய பிராட்டியாருக்குக்
கணவனாகிய எம்பெருமான் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு, அன்பு நிறைந்த
நெஞ்சினையுடையவளாகி என்னை நீக்கிய என் பெண்ணானவள், தளர்ந்த நுண்ணிய இடையின்மேல் தன் கையை
1. அவன் கிடக்கை மனக்கவர்ச்சியாக
இருக்கும் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘கிடக்ததோர்’ என்று தொடங்கி. இது, திருமாலை,
செ.23.
2. “செல்வம்” என்றதற்கு
அருளிச்செய்த முதற்பொருளுக்குச் சேர, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவன் வரவு’ என்று தொடங்கி.
3. “ஒல்கி ஒல்கி” என்ற
அடுக்குத்தொடருக்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘ஓரடியிலே’ என்று தொடங்கி.
பஞ்சி யடரனிச்ச
நெருஞ்சி ஈன்ற பழமாலென்
றஞ்சு மலரடிகள் அரங்கண்
டன்ன அருங்காட்டுள்
குஞ்சித் தசைந்தசைந்து
குருதி கான்று வெய்துயிரா
வஞ்சி இடைநுடங்க மயில்கை
வீசி நடந்ததே.
என்பது, சீவக சிந். 341.
4. “நடந்து எங்ஙனே
புகுங்கொல்” என்பதற்கு, எதிர்மறை முகத்தால் பாவம்
அருளிச்செய்கிறார் ‘நடந்திலளாகில்’ என்று
தொடங்கி. ‘நடந்திலளாகில்
போய்ப் புகலாம்’ என்றது, நடவாதபோது எப்படிப் போகப்போகாதோ,
அப்படியே நடந்தாலும் சென்று சேரமாட்டாள் என்றபடி.
5. நடந்தால்
போகமாட்டாளோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘அன்னமென்னடை’ என்று தொடங்கி.
|