கண
கண்ணநீர் துளும்ப -
1இது தனக்கும் ஊற்றே அன்றே அது. செல்லும் கொல் - 2இனி எப்படியும்
மீளாளே அன்றோ. வழியில் மிறுக்குக்கள் கழித்துப் புகவல்லளோ?
ஒசிந்த ஒண்மலராள்
கொழுநன் திருக்கோளூர்க்கே - 3பிரிந்தார் துவட்சி சொல்லுகைக்குக் கலந்தாரோ
தான் துவளாதே இருக்கிறார்? வண்டாலே எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போலே காணும் நித்யசம்ச்லேஷத்தாலே
துவண்டிருக்கும்படி. ஒண்மலராள் கொழுநன் உண்டு, அவளுடைய வல்லபன்; அவனுடைய திருக்கோளூர்க்கே.
கசிந்த நெஞ்சினளாய் - அன்போடு கூடின மனத்தையுடையளாய். 4பற்றுகைக்கு அவ்வூரே ஆக
அமையும், விடுகைக்குத் தாயாக அமையும். ஒண்மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்
என்பதற்கு, 5அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.
ஒண்மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல். 6திருமகளார் தனிக்கேள்வன்
என்னும்
1. இது தனக்கும் - கண்ணநீர்க்கும்.
அது - மனம்.
2. மீளுதல் வேண்டத் தக்கதாக
இருக்க, “செல்லுங்கொல்” என்கிறது என்?
என்ன, ‘இனி எப்படியும்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். கசிந்த நெஞ்சினள் ஆகையாலே மீளாள் என்றபடி.
3. பிராட்டியினுடைய துவட்சி
சொல்லுகைக்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘பிரிந்தார்’ என்று தொடங்கி.
4. “திருக்கோளூர்க்கே கசிந்த
நெஞ்சினளாய் எம்மை நீத்த” என்றதனால்
பலித்த பாவத்தை அருளிச்செய்கிறார் ‘பற்றுகைக்கு’
என்று தொடங்கி.
என்றது, பிராவண்யத்துக்கு அடி ததீயபர்யந்தம் செல்லுதல்; விரக்திக்கு
அடி தாயாரையும்
விடுதல் என்றபடி.
5. “ஒண்மலராள் கொழுநன்”
என்பதற்கு, இரண்டு வகையாக, பாவம்
அருளிச்செய்கிறார். முதலது, காதல் குணத்திலே நோக்கு;
அதனை
அருளிச்செய்கிறார் ‘அவனுடைய’ என்று தொடங்கி. இரண்டாவது,
அறப்பெரியவனாந் தன்மையிலே
நோக்கு; அதனை அருளிச்செய்கிறார்
‘ஒண்மலராள் கொழுநன்’ என்று தொடங்கி.
6. இவளுக்குக்
கணவனாக இருத்தல் அவனுக்கு ஏற்றமோ? என்ன, ‘ஏற்றமே’
என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘திருமகளார் தனிக் கேள்வன்’
என்று தொடங்கி. இது, திருவாய். 1. 6 : 9.
|