முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
325

டனையும் செய்து கொடுக்குமே அன்றோ. 1பரவசப்படும் தன்மையை விளைத்து இடையிலே பொகடிலும் பொகடும்; அன்றிக்கே, கொண்டுபோய்ப் பொகடிலும் பொகடும் அன்றோ.

(8)

627.

    காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
    ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
    சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
    நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.

   
பொ-ரை :- என்நேரிழை, சிறந்த பொருள்களைக் கண்டால் என் கண்ணபிரானுக்கு என்று சொல்லிக்கொண்டு அன்புள்ளவளாய் இருப்பாள்; இவை எல்லாம் கிடக்க, சேரியிலுள்ளார் எல்லாரும் பலவகைப்பட்ட பழிகளைத் தூற்றி இரைக்கும்படியாக இனிச்சென்று திருக்கோளூர்க்கே நடந்தாள்; என்னைச் சிறிதும் நினைத்தாள் இல்லை என்கிறாள்.

    வி-கு :- நல்லனகள் காரியமவை என மாற்றுக. நல்லனகள் என்பதில் ‘கள்’ அசைநிலை. காரியம் - பொருள்கள். ஈரியாய் - அன்புள்ளவளாய். இது எல்லாம்: ஒருமை பன்மை மயக்கம். சேரி - தெருவு. தூஉய் - தூவி; தூற்றி. நேரிழை - பெண்; நேரிழை - ஆபரணங்களை அணிந்தவள்.

    ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 2அவன் பக்கலிலே மிக்க ஈடுபாடுடையவளாயிருக்கிற இவள், சேரியிலுள்ளார் சொல்லும் பழியே தோட்கோப்பாகத் திருக்கோளூர்க்கே போயினாள் என்கிறாள்.

    நல்லனகள் காரியம் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் - முதலிலே காண்பது இல்லை; 3பொருள்களில் நல்லது காணில், தன்னை எனக்காக ஓக்கி வைத்த கிருஷ்ண

 

1. மேலே ‘இரண்டனையும்’ என்றதனை விவரணம் செய்கிறார் ‘பரவசப்
  படுந்தன்மையை’ என்று தொடங்கி.

2. “கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள், சேரி பல்பழி தூஉய் இரைப்ப”
  என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

3. ‘க்ரியத இதி காரியம்’ என்ப ஆகையாலே, “காரியம்” என்ற சொல்,
  ஈண்டுப் பொருள்களைக் காட்டுகிறது. ஓக்கிவைக்கை-ஆக்கிவைத்தல்.