ப
படியே வழிக்குத் தாரகமாமன்றோ.
நேர் இழை நடந்தாள் - 1கடைப் பணிக்கூட்டம் கண்டு கொண்டு பின்னே போகவன்றோ
இவள் ஆசைப்படுகிறது. நடந்தாள் - 2தன் பெண்பிள்ளையே யாகிலும், ‘திருக்கோளூரிலே
போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை இங்ஙனல்லது சொல்ல ஒண்ணாதே அன்றோ. தன் மகளை எங்ஙனே
கனக்க நினைத்திருக்கிறாள் தான்! வயிற்றிற் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில்
தொடர்புடையவர்கள் உத்தேசியராமித்தனை.
3ஒருநாள்
நம் பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி, ‘தன்சிஷ்யனைத்
தான் கொண்டாட நின்றான்’ என்றிராதே கொண்மின்! “கணபுரம் கைதொழும் பிள்ளையைப் பிள்ளை
என்று எண்ணப் பெறுவரே” என்று பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச்செய்தார்.
அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டன் இடாநிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க,
‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறியவேணும்; இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’
என்றான். எம்மை ஒன்றும் நினைத்திலளே - 4வழிக்குத் துணையாகத்தான் கொடு
போகாவிட்டால், நினைக்கத்தான் ஆகாதோ? எதிர்கொள்வாரிலே சிலராகவாதல், வழித்துணையாவாரிலே
சிலராக வாதல், ஏதேனும் ஓர் ஆகாரத்தாலே தான் நினைக்கலாகாதோ?
1. “நேரிழை” என்று கூறியதற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார் ‘கடைப்
பணிக்கூட்டம்’ என்று தொடங்கி. கடைப் பணிக்கூட்டம்
-ஆபரணங்களினுடைய
நுனி கூடின இடம்.
2. ‘போனாள்’ என்னாமல்,
“நடந்தாள்” என்று கௌரவமாகச் சொல்லுவான்
என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘தன்
பெண்பிள்ளையேயாகிலும்’ என்று தொடங்கி. வியாக்யாதாவின் ஈடுபாடு:
‘தன்மகளை எங்ஙனே’
என்று தொடங்கும் வாக்கியம்.
3. சிஷ்யர்களை, பகவத்
சம்பந்தம்கொண்டு உத்தேசியராகக்
கொண்டாடுமதற்கு இரண்டு ஐதிஹ்யங்கள் காட்டுகிறார்
‘ஒருநாள்’ என்று
தொடங்கியும், ‘அம்முணியாழ்வான்’ என்று தொடங்கியும். ‘கணபுரம்
கைதொழும்’
என்ற திருப்பாசுரம், பெரிய திருமொழி, 8. 2 : 9.
4. “நினைத்திலள்”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘வழிக்குத்
துணையாக’ என்று தொடங்கி. “ஒன்றும்” என்றதற்கு,
பாவம்
அருளிச்செய்கிறார் ‘எதிர்கொள்வாரிலே’ என்று தொடங்கி.
வழித்துணையாவார் - பழிசொல்லுவார்.
|