என
என்பாள் ‘ஒன்றும் நினைத்திலன்’
என்கிறாள். 1‘அத்தலையில் நினைவே காரியகரமாவது’ என்றிருக்கிறாள்.
பகவானிடத்தில் சம்பந்த முடையாருடைய அபிமானமே உத்தேசியம்
(9)
628.
நினைக்கிலேன் தெய்வங்காள்!
நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த
லோசனனை
தினைத்த னையும் விடாள்
அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்குவான் பழியும்
நினையாள் செல்ல வைத்தனளே.
பொ-ரை :- தெய்வங்களே! என் மகளுடைய தன்மைகளை என்னால்
நினைக்க முடியவில்லை; நீண்ட கண்களையுடைய இளமை பொருந்திய மான் போன்றவளான என் மகள் இப்பொழுது
சென்று, எல்லா உலகங்களையுமுடைய தாமரைக்கண்ணனாகிய எம்பெருமானைத் தினையளவு சிறிய பொழுதும்
விடாதவளாகி, அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கே, குடிக்கு உண்டாகும்
பெரிய பழியையும் நினையாதவளாகிச் சொன்றாள் என்க.
வி-கு :-
தெய்வங்காள்! நினைக்கிலேன்; இளமான் அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள்; மனைக்கு வான்பழியும் நினையாள்; திருக்கோளூர்க்கே இனிப்போய்ச் செல்லவைத்தனள்
என்க. விடாள், நினையாள் என்பன : முற்று எச்சங்கள். தினை, பனை என்பனவற்றைச் சிறுமை
பெருமைகட்கு எடுத்துக் கூறுதல் மரபு. “தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக், கொள்வர் பயன்
தெரி வார்” என்பது திருக்குறள்.
ஈடு :-
பத்தாம்பாட்டு. 2இந்தக் குடிக்கு வரும்
பெரும் பழியை நினையாதே, திருக்கோளூரிலே புக்கு அவனை ஒருகாலமும் விடுகின்றிலள் என்கிறாள்.
1. அவள் நினைத்தால் தனக்குப்
பயன் ஏது? என்ன, ‘அத்தலையில்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது சுவாபதேசப்
பொருள்.
இதனை விவரணம் செய்கிறார் ‘பகவானிடத்தில்’ என்று தொடங்கி.
2.
“மனைக்கு வான்பழியும் நினையாள், திருக்கோளூர்க்கே போய்
அரவிந்தலோசனனைத் தினைத்தனையும்
விடாள்’ என்பனவற்றைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|