முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
33

ணழ

ணழிவிலே செலவு எழுதுவர் கண்டீர் என்றபடி. அடியேனுக்கும் போற்றுமினே - 1நீங்களும் அவனைப்போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்கவேண்டும். 2அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே, இத் தலையை நினைக்க விரகு இல்லையன்றோ; 3“முக்தன் இச்சரீரத்தை நினைப்பதில்லை” என்னும்படியன்றோ இருப்பது. அடியேனுக்கும் போற்றுமின் - அடியேன் இடையாட்டத்தையும் அத்தலைக்கு அறிவிக்கவேண்டும்.

(5)

558.

        போற்றி யான்இரந்தேன் புன்னைமேலுறை பூங்குயில்காள்!
        சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூ ருறையும்
        ஆற்றல் ஆழி யங்கை அமரர்பெருமானைக் கண்டு
        மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.

   
பொ-ரை :- புன்னைமரத்தின்மேல் தங்கியிருக்கின்ற அழகிய குயில்களே! யான் போற்றி இரந்தேன்; சேற்றிலே வாளைமீன்கள் துள்ளி விளையாடுகின்ற திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் நித்தியவாசம் செய்கின்ற பெருமிடுக்கினையுடைய சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்ற, நித்தியசூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானைக் கண்டு, என் மயக்கம் நீங்குவதற்கு உரியது ஒருதன்மையாக மறுமாற்றத்தைக் கொண்டு வாருங்கோள்.

 

1. “அடியேனுக்கும்” என்ற உம்மையால் உங்கள் போகத்தைப் பார்த்து,
   நீங்களும் ஈசுவரனைப்போலே அங்கே கால் தாழாதே, என்காரியத்தையும்
   அறிவிக்கவேண்டும் என்று தோற்றுகிறதே அன்றோ; அதனை
   அருளிச்செய்கிறார் ‘நீங்களும்’ என்று தொடங்கி.

2. உன் காரியத்துக்காகப் போகிற நாங்கள் உன்னை நினையாதிருப்பேமோ?
  ‘என்னையும் நினைக்கவேண்டும்’ என்றது, என்கொண்டு? என்ன, ‘அதாவது’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இங்கே, “நீரிருக்க
  மடமங்கைமீர்!” என்னும் திருவரங்கக் கலம்பகச் செய்யுள் அநுசந்தேயம்.

3. அங்கே போனால் நினையாததற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘முக்தன்’
  என்று தொடங்கி.

  “நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”

  என்பது, சாந்தோக்யம். 3. 12 : 3.

  இடையாட்டம் - காரியம்.