முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
330

    நினைக்கிலேன் - 1கடலைக் கரை காண ஒண்ணாதே அன்றோ. 2தன்னைப் பொகட்டுப் பேரனபடி, வழியில் மிறுக்குகள், அங்குப் புக்கால் இவள் படும் பாடுகள் எனப் பலவேயா மன்றோ. தெய்வங்காள் - 3இதனை, ‘கொல்லை’ என்பார் முகம் பார்த்துச் சொல்ல ஒண்ணாதே; 4பழிசொல்லாமையையும், சிறை உறவு போலே தன்னோடு ஒக்க உறங்காமையையும் பார்த்துச் சொல்லுகிறாள். தெய்வங்காள் நினைக்கிலேன் - 5செயல் அற்றுக் கைவாங்கிச் சொல்லுகிற வார்த்தை அன்றோ. நெடும் கண் இளமான் இனிப்போய் - 6விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்! 7இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே, தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்! இனிப்போய் - 8யார் செய்யக்கூடியதை யார்தான் செய்கிறார்? 9கண்படைப்பாளும் தானாய்ப் புறப்பட்டுப்

 

1. நினைக்க ஒண்ணாமைக்கு அடி, இவள் தன்மை அளவிற்குட்படாதவை
  என்கிறார் ‘கடலை’ என்று தொடங்கி.

2. காண ஒண்ணாமைக்கு இவள் செயல்கள் கடல்போன்று அளவிட
  முடியாதனவோ? என்ன, ‘தன்னைப் பொகட்டு’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்.

3. வேறு தெய்வங்களை வணங்காத இவள் “தெய்வங்காள்” என்கிறது என்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இதனை’ என்று தொடங்கி.

4. இவற்றைப் பார்த்துச் சொல்லுகைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
  ‘பழி சொல்லாமையையும்’ என்று தொடங்கி.

5. வேறு கதி இல்லாமையாலே சொல்லுகிறாள் என்று, அதற்கே வேறும் ஒரு
  காரணத்தை அருளிச்செய்கிறார் ‘செயல் அற்று’ என்று தொடங்கி.

6. “இளமான்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘விழுக்காடு’ என்று
  தொடங்கி. விழுக்காடு - மேல் வரும் காரியம்.

7. “அனைத்துலகுமுடைய” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, “நெடுங்கண்”
  என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இந்தக்கண்ணுக்கு’ என்று தொடங்கி.
  சர்ப்பயாகம் செய்தவன் - ஜநமேஜயன்.

8. “இனி” என்கையாலே, இவள் போதற்கு இடம் இல்லை, அவனுக்கே இடம்
  உள்ளது என்று கொண்டு பாவம் அருளிச்செய்கிறார் ‘யார்
  செய்யக்கூடியதை’ என்று தொடங்கி.

9. ‘யார் செய்யக்கூடியதை’ என்பான் என்? இவள் போகலாகாதோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கண்படைப்பாளும்’ என்று தொடங்கி.