முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
333

பட

பட்டாள் என்னுதல்; தான் மீளாதபடி புகுகையாலே நாம் அங்கே செல்லும்படி வைத்தாள் என்னுதல்.

(10)

629.

        வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
        கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
        பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
        சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.

   
பொ-ரை :- சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.

    வி-கு :-
அலற்றிச் சொன்ன பத்து என்க. இப் பத்தை உரைப்பார் ஆள்வார் என்க.

    ஈடு :-
முடிவில், 1இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு திருநாடு என்கிறார்.

    வைத்த மா நிதியாம் - 2இவள் தனிவழி போகைக்கும், தாயாரை விடுகைக்கும் காரணம் இருக்கிறபடி. 3செல்வம் சேர்த்து வைத்ததாக இருக்க, எடுத்து அழித்துக் கெடுத்து ஜீவியாமல் ஆறி இருப்பார் இலரே. வைத்தமாநிதி - 4எய்ப்பினில் வைப்பினைக் காசினை மணியை” என்கிறபடியே, தளர்ந்தார் தாவளமாய், எய்ப்பினில்

 

  என்று கூட்டிக்கொள்க. இரண்டாவது பொருளில், நெடுங்கண் இளமாள்
  இனி, அவன்சேர் திருக்கோளூர்க்கே மனைக்கு வான்பழியும்
  நினையாதவனாய்க்கொண்டு, போய், மீளுகைக்குத் தகுதியுங்கூட
  இல்லாதபடி அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத்
  தினைத்தனையும் விடாள்; நாம் அங்கே செல்லும்படி வைத்தாள்;
  தெய்வங்காள்! நினைக்கிலேன் என்று கூட்டிக்கொள்க.

1. “இப்பத்தும் சித்தம் வைத்து உரைப்பார்” என்பது போன்றவைகளைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “வைத்தமாநிதி” என்று இப்போது அவனுடைய இனிமையைச்
  சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவள், தனிவழி’ என்று தொடங்கி.

3. நிதி இருந்தால் இப்படிப் போகவேண்டுமோ? என்ன, ‘செல்வம் சேர்த்து’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. “நிதி என்கைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘எய்ப்பினில்
  வைப்பினை’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி. 7. 10 : 4.
  தளர்ந்தார் தாவளம் - எய்ப்பினில் வைப்பு. ‘உண்டு என்ன, உயிர்
  நிற்கும்படியாய்’