முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
339

உள

உள்ள இனிமை மறக்கப்பண்ணிற்று என்றாள்; விசேஷஜ்ஞனாகையாலே துன்பத்தை அறிவிக்க வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூதுவிட்டாள். இத் திருவாய்மொழியில், வாராமைக்கு அடி 1பரப்பனாகையாலே என்று பார்த்தாள்; 2“தன்மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்” என்கிறபடியே, அசாதாரணமானது அன்றே வடிவு; அடியார்களோடு ஏகரசன் ஆகையன்றோ என்று பார்த்து ஐகரஸ்யம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள் என்று பட்டர் அருளிச்செய்வர். “பல பாசுரங்களிலும் ‘இதுவோ தக்கவாறு’ என்கையாலே, உயிர்கள் மாட்டு அருளுடைமை பற்றாசாகத் தூது விடுகிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.

    3
“இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவபோகங்களை நுகர்ந்தவளான நான்” என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த்துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே, அங்கேபுக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர். 4‘புறப்பட்டவள் முடியப் போகமாட்டாதே நக

 

  என்றது, பிரிந்தால் தரித்திருக்கப்போகாத வைலக்ஷண்யத்தையுடைய
  அவனையும், பிரிந்தால் தரித்திருக்க ஒண்ணாத துன்பத்தையுடைய
  தன்னையும் என்றபடி. ‘விசேஷஜ்ஞனாகையாலே’ என்றது, தன்
  வைலக்ஷண்யத்தையும் இவளுடைய துன்பத்தையும் அறியுமவனாகையாலே
  என்றபடி.

1. ‘பரப்பனாகையாலே’ என்றது, இத்திருவாய்மொழியில் வருகிற
  “முன்னுலகங்கள் எல்லாம் படைத்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

2. “தன் மன்னு நீள்கழல்” என்பது, திருவாய். 6. 8 : 6. ஐகரஸ்யம் - ஒரே
  இன்பம். ஜீவாத்மா அநுபவிக்கிற இன்பத்தையே பரமாத்மாவும் தனக்கு
  இன்பமாகக் கொள்ளுகிறான் என்றபடி. மேலே ‘ஏகரசன்’ என்றதூஉம்
  இதுபற்றி.

3. “ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
   புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18.

4. ‘மேல் திருவாய்மொழியிலே’ என்று தொடங்கும் மேலேயுள்ள பகுதியில்
  ‘புறப்பட்டாள் முடியப் போய்ப் புகமாட்டாமல்’ என்று
  அருளிச்செய்திருக்க, மீண்டும் இங்கு, ‘புறப்பட்டவள் முடியப்
  போகமாட்டாதே’ என்று அது தன்னையே அருளிச்செய்தது, பிள்ளான்
  நிர்வாஹத்திலும் பட்டர் நிர்வாஹமே சிறந்தது என்று தோன்றுகைக்காக.