வ
வி-கு :-
பூங்குயில்காள்! யான் போற்றி இரந்தேன், உறையும் பெருமானைக் கண்டு மையல் தீர்வதொரு வண்ணம்
மாற்றம் கொண்டருளீர் என்க. ‘ஆற்றல்’ என்பதனை, பெருமானுக்கு விசேடணமாக்கலுமாம் மையல் -
மயக்கம்.
ஈடு :-
ஆறாம்பாட்டு. 1சிலகுயில்களைக் குறித்து என் நிலையை அவனுக்கு அறிவித்து அங்குநின்றும்
ஒரு மறுமாற்றம் கொண்டு வந்து அருளிச்செய்யவேண்டும் என்கிறாள்.
போற்றி -
2சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னைமரத்திலே உயர இருந்தன சிலகுயில்கள்; அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற
ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள். 3முகம் பார்க்கைக்குச்
சொல்லுகிற பாசுரம் இதுபோலே காணும். 4இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது
நிற்கஒண்ணாது என்றிருக்கிறாள் காணும். யான் இரந்தேன் - அவன்தான் இரக்க இருக்கக் கடவ வேண்டப்பாடுடைய
நான் இரந்தேன்; 5ஆள்விடுவானும் இரப்பானும் எல்லாம் தானேஅன்றோ. 6அன்றிக்கே,
“இரகுவம்சத்தை மகிழச் செய்கின்ற இளையபெருமாள், தமையனுடைய
1. “பூங்குயில்காள்! மாற்றம்
கொண்டருளீர்” என்பன போன்றவைகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “போற்றி” என்னும்
எடுத்தல் ஓசைக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘சம்சார
வெக்காயம்’ என்று தொடங்கி. இதனால்,
நீங்கள் உங்கள் பேடைகளோடே
கூடப் புன்னைமேலே ஏகாந்தமாக அநுபவிக்கிற இன்பம் நித்தியமாகச்
செல்லவேணும் என்று மங்களாசாசனம் செய்கிறாள் என்றபடி.
3. மங்களாசாசனம்
செய்வது எதற்காக? என்ன, ‘முகம் பார்க்கைக்கு’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
இதனால், தன் முகம்
பார்த்துக் காரியம் செய்கைக்கு மங்களாசாசனம் செய்கிறாள் என்றபடி.
4. மங்களாசாசனம்
செய்தால் காரியம் செய்யவேண்டி இருக்குமோ? என்ன,
‘இந்த ஒலி’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். இதனால்,
தன் தன்மையைக் கொண்டு நினைக்கிறாள் என்றபடி.
5. அவன் அப்படி
இரக்குமோ? என்ன, ‘ஆள்விடுவானும்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
6. “யான் இரந்தேன்”
என்பதற்கு, வேறும் ஒரு பொருள் அருளிச் செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
ஸ ப்ராது: சரணௌ
காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம் உவாச
அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்”
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
31 : 12.
|