ரத
ரத்தை அடுத்த வனத்திலே கிடந்து தூதுவிடுகிறாள்’ என்று
பட்டர் அருளிச்செய்யும்படி. 1“கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக
எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது” என்கிறபடியே, பிறர்
இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச்
சொல்லவேண்டாவே. கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க்
கிடவாமே செய்ய நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம்புகழை நோக்கிக்கொள்ளச் சொல் என்று
சொன்னாள் அன்றோ; அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.
630.
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்டபிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.
பொ-ரை :-
சிறந்த குணங்களையுடைய பறவைக் கூட்டங்களே! தீவினையேனாகிய
நான் உங்களை இரக்கின்றேன்; ஆதிகாலத்தில் எல்லா
1. தலைவனுடைய பேர்அருளையே பற்றாசாகக்கொண்டு தூதுவிட்ட
பேர்
உளரோ? என்ன, ‘உளர்’ என்று, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘கீர்த்தியையுடைய’ என்று
தொடங்கி. இது, பிள்ளான் நிர்வாஹத்தைப்
பற்றியது.
“ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.
சுலோகத்திலேயுள்ள “கீர்த்திமாந்” என்ற
சொல்லுக்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பிறர் இழுக்கினை’ என்று தொடங்கி. “ஜீவந்தீம்”
என்ற
சொல்லுக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘கடலை’ என்று தொடங்கி.
“தினைத்தனையும்
விடாள்” என்ற திருத்தாயாருடைய விருப்பமே
பலித்தது; அங்கே புக்கு அநுபவித்தாள் என்பது,
பிள்ளான்
நிர்வாஹத்திற்குக் கருத்து. பட்டர் திருவுள்ளம், இத்திருவாய்மொழியின்
முடிவிலே கலவி உண்டானால், “ஆடி ஆடி” என்ற திருவாய்மொழியின்
ஈற்றிலே கலவி தோன்ற அருளிச்செய்து,
“அந்தாமத்து” என்ற
திருவாய்மொழியிலே அதனை விரித்து அருளிச்செய்தாற்போன்று, மேல்
திருவாய்மொழியிலே
கலவியை விளக்கி அருளிச்செய்வர்; அங்ஙனம்
அருளிச்செய்யாமையாலே கலவி இல்லை என்பது. பட்டர்
நிர்வாஹம்
“எங்ஙனே புகுங்கொல்” என்றதனை நோக்காகக்கொண்டு எழுகின்றது.
“செல்ல வைத்தனள்”
என்பதற்குச் செல்ல ஒருப்பட்டாள் என்பது
பொருள்.
|